இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் சிலம்பரசனுடன் விஜய் சேதுபதி பிரியங்கா மோகன் ஆண்ட்ரியா சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பல பிரச்சனைகள் தடைகளை கடந்து அரசன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் அரசன் படத்துடன் ராஜன் வகையறா படப்பிடிப்பையும் வெற்றிமாறன் மாறி மாறி நடத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசன் படம் குறித்து சென்னையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு கூறியதாவது, அரசன் படம் 2027 பொங்கலுக்கு வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக படம் அப்போது வெளியாகாது.
இந்த படத்தை அவசரமாக எடுத்து வெளியிடலாம். ஆனால் சரியாக வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும். நீங்கள் பெருமைப்படும் விதமாக நான் ஒரு படம் பண்ணுவேன் என உங்கள் எல்லோருக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை காப்பாற்றும் படமாக அரசன் கண்டிப்பாக தரமான சம்பவம் செய்யும்.
பொங்கலுக்கு படம் வெளிவரவில்லை என்று கூறி விட்டீர்கள். அது வரை ரசிகர்களால் காத்திருக்க முடியாது. இந்த படம் எடுப்பதற்கு முன்னால் இது எந்த மாதிரியான ஒரு படம் என ட்ரோனில் வைத்து சில காட்சிகள் படமாக்கினோம். இதுவரை நாங்கள் படமாக்கியதை தி வேர்ல்ட் ஆஃப் அரசன் என்ற பெயரில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை உருவாக்க உள்ளோம்.
அதை வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் பிரத்யேகமாக வெளியிட உள்ளோம் என நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். சிம்பு நடித்த படங்களில் மிக தரமான ஒரு படமாக அரசன் படம் இருக்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார். அசுரன் ஆடுகளம் விடுதலை வடசென்னை போன்ற சம்பவ படங்களை தந்த வெற்றிமாறன், அரசன் படத்திலும் தனது முத்திரையை பதித்திருப்பார் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க துவங்கி விட்டார்.





