- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க விஜய் நா வரேன் என்று டயலாக் பேசி இனி ஏமாத்த முடியாது - மாதம்...

உங்க விஜய் நா வரேன் என்று டயலாக் பேசி இனி ஏமாத்த முடியாது – மாதம் ஒரு தடவை எம்எல்ஏவா என்னை தொகுதி மக்கள் சந்திக்கலாம்ன்னு சொன்னாரே? ஒருமுறையாவது சந்திச்சாரா?

- Advertisement -

கடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பல நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் நாம் தமிழர் கட்சி சீமானும் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர்.

ஆனால் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக கட்சியின் தலைவர் விஜய் மொத்தம் 25 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தார். பெரும்பாலான தொகுதிகளுக்கு அவர் பிரசாரம் செய்ய போகவே இல்லை. பல தொகுதிகளில் பிரசாரம் செய்ய வருவதாக அறிவித்து விட்டு பிறகு போலீஸ் அனுமதி தரவில்லை என்று காரணம் சொல்லி அதை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்போது பேசிய நடிகர் விஜய், நான் பல தொகுதிகளில் பிரசாரம் செய்ய நேரில் வர முடியவில்லை. ஆனால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எல்லா தொகுதிகளுக்கும் நேரில் வந்து மக்களை சந்தித்து பேசுவேன். உங்கள் மகனாக உங்கள் தம்பியாக உங்கள் அண்ணனாக நான் வருவேன் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தொகுதிக்கும் எட்டிப் பார்க்கவில்லை.

இதற்கிடையே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்த போது, நான் முதல்வர் ஆனாலும் எல்லா தொகுதியும் எனக்கு முக்கியமானதுதான். அதிலும் நான் போட்டியிட்ட தொகுதிக்கு நான்தானே எம்எல்ஏ? அதனால் நான் எம்எல்ஏ ஆன பிறகு மாதம் ஒரு நாள் தொகுதிக்கு வருவேன்.

- Advertisement -

அப்போது எம்எல்ஏவாக தொகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை நேரில் கேட்பேன். என்னை சந்திப்பது எல்லாம் அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லை. ஈஸியாக என்னை பார்க்கலாம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 மாதங்களாக இதுவரை பெரம்பூர் தொகுதிக்கு சென்று அவர் மக்களை சந்தித்ததாக தெரியவில்லை. எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டதுடன் சரி.

திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெயித்த விஜய், தன்னை ஜெயிக்க வைத்த அந்த தொகுதி மக்களுக்கு ஒரு நன்றி கூட சொல்ல மறந்துவிட்டார். அந்த தொகுதி எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தொகுதி மக்களுக்கு ஒரு நன்றியாவது சொல்லுங்க என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திய பிறகுதான், திருச்சி கிழக்கு தொகுதிக்கு விஜய் சென்றார். இப்படி சொன்ன சொல் எதுவும் காப்பாற்றாத விஜய்க்கு இடைத் தேர்தல் தோல்வியை பரிசளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்