- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தை ஹோல்டு செய்துவிட்டு ராஜன் வகையறா ஷூட்டிங்கில் பிஸியான இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர்...

அரசன் படத்தை ஹோல்டு செய்துவிட்டு ராஜன் வகையறா ஷூட்டிங்கில் பிஸியான இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் சிம்பு காட்டிய அதிரடி ரியாக்சன்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு இப்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு துவங்கி பல மாதங்களாகியும் இன்னும் படப்பிடிப்பு வேகம் எடுக்கவில்லை. இன்னும் பல மாதங்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த படம் குறுகிய கால படைப்பு. வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று முதலில் சொல்லப்பட்டது. அதற்கு பிறகு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீஸ் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அதாவது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அரசன் படம் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. சம்மர் டைமில் இந்த படத்தை வெளியிடலாம் என்ற ஒரு தகவல் மட்டுமே உள்ளது. அரசன் படத்தை இதுவரை எடுத்த வரை மிகவும் சிறப்பாக அருமையாக வந்துள்ளதால் அவசர அவசரமாக எடுத்து படத்தின் தரத்தை குறைத்து விட வேண்டாம்.

அதனால் சற்று பொறுமையாக நிதானமாக அரசன் படப்பிடிப்பை நடத்தினால் நாம் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த படமாக அது உருவாகி விடும் என்று இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் நாயகன் சிம்புவிடம் கூறியிருக்கிறார். அவரும் அதை ஏற்றுக்கொண்டு ஓகே சொல்லிவிட்டார்.

- Advertisement -

ஆனால் அரசன் படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் கென் கருணாஸ் நடித்து வரும் ராஜன் வகையறா படப்பிடிப்புக்கான பணிகளை துவங்கி விட்டார். வரும் அக்டோபரில் துவங்கி இந்த படத்தை சில மாதங்களில் முடித்து வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் திட்டமிட்டு பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

தன்னுடைய அரசன் படத்தை நிறுத்தி விட்டு ராஜன் வகையறா படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அதிக கவனம் செலுத்துவது சிம்புவுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. எனினும் வெற்றிமாறன் மீண்டும் அழைக்கும் வரை நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே நடிக்க கமிட் ஆகி கால்ஷீட் தந்திருந்த சிம்பு, அந்த படத்தில் நடிக்கவும் உடனே படப்பிடிப்பை துவங்கவும் சொல்லியிருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்