- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு ஓட்டு போட்டது தப்பா சரியான்னு மக்கள் இந்த 5 வருஷத்துல புரிஞ்சுப்பாங்க -...

நடிகர் விஜய்க்கு ஓட்டு போட்டது தப்பா சரியான்னு மக்கள் இந்த 5 வருஷத்துல புரிஞ்சுப்பாங்க – நடிகை ரோஜா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் எம்எல்ஏவாகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ரோஜா இருந்தவர். இப்போது சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து தமிழில் அன்பே டயானா லெனின் பாண்டியன் போன்ற படங்களில் ரோஜா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, விஜய் கூட நான் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். விஜய் எப்படிபட்டவர் என்ன பண்ணுவார் என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. சினிமாவில் பார்த்து அந்த இமாஜினேசன்ல மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தார் என்று சொன்ன போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சாரா? இவரு பேசவே மாட்டாரே? அரசியல்னா நிறைய பேசணுமே? நிறைய ஊர் சுத்தணுமே? நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலேன்னாலும் அடுத்தவங்க சொல்றதை கேக்கணுமே? இதெல்லாம் அவர் செய்ய மாட்டரே? எப்படி அவர் அரசியலுக்கு வந்தார் என்று நானே ரொம்பவும் ஆச்சரியப்பட்டேன்.

சினிமாவுக்கும் நிஜத்துக்கும் இடைபட்ட வித்யாசத்தை நாம யோசிச்சோம். ஆனா ஜனங்க வந்து சினிமா மாதிரி இதையும் நினைச்சுக்கிட்டு ஓட்டு போட்டுட்டாங்க.ஆனா மக்கள் இப்போ ஓட்டு போட்டுட்டாலும் இந்த 5 வருஷத்துல நாம செஞ்சது தப்பா சரியான்னு அவங்க ஜட்ஜ் பண்ணிடுவாங்க. விஜய் ஆட்சியை பார்த்து அவங்க புரிஞ்சுப்பாங்க.

- Advertisement -

அதே மாதிரி விஜய்க்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கிற வித்யாசம் இந்த 5 வருஷத்துல தெரிஞ்சுடும். சினிமாவில் நடிக்கும் போது நாம எதுவும் கொடுக்கலே என்றாலும் மக்களை நம்மை நேசிப்பாங்க. நாம நல்லா இருக்கணும் என்று வாழ்த்துவாங்க. நம்ம கஷ்டப்பட்டு நடிச்ச படம் ஹிட் பண்றதுக்கு ரசிகர்கள் பார்வையாளர்கள் ரொம்பவும் ஹெல்ப் பண்ணுவாங்க.

ஆனால் அரசியலில் அப்படி கிடையாது. எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். அவங்க எதிர்பார்க்கிறதை எல்லாம் நாம செய்யணும். அப்படி நாம அவங்க எதிர்பார்க்கற விஷயங்களை செய்ய முடியலேன்னா மக்கள் ரொம்ப சீக்கிரமா வெறுத்து நம்மை ஒதுக்கிடுவாங்க என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்