தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவர் குரு சோமசுந்தரம். ஜிகர்தண்டா பேட்ட ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களில் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று சினிமா களத்துக்குள் வந்தவர். திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் அசாத்தியமான ஒரு நடிகராக உள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் குரு சோமசுந்தரம் கூறியதாவது, நான் அநாவசியமான செலவுகளை எப்போதும் வெச்சுக்கறது இல்லை. இப்பக்கூட நான் புது சொக்காய் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். இது வாங்கினது தப்பா சரியான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இருந்தாலும் பரவாயில்லை. சொக்காய் எடுத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சமாதானம் செஞ்சுக்கிட்டேன்.
முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் மட்டுமே புது டிரஸ் எடுத்தோம். இப்போ போற போக்குல டிரஸ் எடுக்கிறோம். பெரும்பாலும் வீடுகளில் ஊசி நூல் என்பதே இருப்பதில்லை. அதாவது துணி சின்னதா கிழிஞ்சு போனால் அதை தைச்சு போட்டுகிற அந்த கான்செப்ட் இப்போது இல்லை. உங்க வீட்டுல ஊசி நூல் இருக்குதா, கண்டிப்பா இருக்காது.
அந்த பழக்கமே இல்லை. இப்போ வீடுகளில் ஊசி நூலே இருக்காது. சட்டையில் பட்டன் பிஞ்சு போனால் துவைக்கும் போது உடைஞ்சு போனால் கூட அந்த கலர்ல அதே பட்டன் கிடைக்காட்டியும் வேற கலர் பட்டன் வெச்சு சட்டை போட்ட காலம் எல்லாம் இருந்துச்சு. என்கிட்ட போட்டுக்க இதுதான் இருக்கு என்று அப்படி எல்லாம் வாழ்ந்தாங்க.
இது வந்து கன்சியூமர்சிசத்தின் உச்சத்தில் நாம் இருப்பதுதான் இதற்கு காரணம். அதாவது எதையும் புதிதாக வாங்கும் ஆசை மக்களிடம் அதிகரித்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளாக கன்சியூமரிசத்தின் உச்சக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனக்கு சட்டையில் ஒரு சிறு கிழிசல் ஏற்பட்டால் கூட உடனே அதை தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக்கறேன்.
இப்படி கன்சியூமரிசம் மூலம் எனக்கு அது பெருமைப்படுத்துது, சந்தோஷப்படுத்துது. அந்த சந்தோஷத்தை நான் அடைய பார்க்கிறேன். இப்படி சந்தோஷப்படுத்துகிற விஷயங்களுக்காக மக்கள் செலவு செய்யறதை பத்தி யோசிக்கிறது இல்லை என்று நடிகர் குரு சோமசுந்தரம் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





