தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு பலத்த ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. ஆனால் 3ல் ஒரு பாகம் மக்கள்தான் தவெக கட்சிக்கு விசில் சின்னத்தில் வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சியாக உள்ள திமுகவுக்கும் ஆளுங்கட்சியான தவெகவுக்கும் கடந்த தேர்தலில் வெற்றிக்கான வித்யாசம் 17 லட்சம் ஓட்டுகள் மட்டுமே. எனினும் திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏக்களின் ஆதரவில்தான் தவெக ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. குறிப்பாக மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத அரசு என்ற அவப்பெயருக்கும் ஆளாகியுள்ளது. மதுரையில் நடந்த மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் கோவிலில் தீர்த்தம் தெளிக்காமல் ஏமாற்றமடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அங்கிருந்த குழாய்களில் பிடித்த தண்ணீரையும் குடங்களில் பிடித்து வைத்திருந்த குடி தண்ணீரையும் போலீசார் தெளித்து விட்டு ஏமாற்றியுள்ளனர். இப்படி தவெக அரசின் ஆட்சி மக்களை பெரிய அளவில் ஏமாற்றமும் வருத்தமும் அடைய செய்து வருகிறது.
மிக முக்கியமான மின்தடை பிரச்னை நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை தந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு பகல் நேரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது. இதுகுறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மின்வெட்டுகள் அன்றாட சிக்கலாக மாறிவிட்டது.
மின்துறை அமைச்சர் முதலமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் என அனைவருக்கும் மக்கள் தினசரி சந்திக்கும் இந்த சிக்கல்கள் நன்றாகவே தெரியும். மின் மேலாண்மை குறித்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுங்கள் என்று ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





