- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் பிரபல வில்லன் நடிகர் - இவர் நடிப்பே...

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் பிரபல வில்லன் நடிகர் – இவர் நடிப்பே வேற லெவலா இருக்குமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் ஜீவன். இவர் வித்தியாசமான கதைக்களங்களில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தில் பாண்டியா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

தொடர்ந்து திருட்டுப் பயலே படத்தில் கதையின் நாயகனாக நடித்து பெரிய அளவில் வரவேற்பு பெற்றார். இந்த படத்தில் சோனியா அகர்வால் மாளவிகா மனோஜ் கே ஜெயன் அப்பாஸ் விவேக் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

அதன் பிறகு நான் அவன் இல்லை நான் அவன் இல்லை இரண்டாம் பாகம் யுனிவர்சிடி திருட்டுப்பயலே 2ம் பாகம் மச்சக்காரன் அதிபர் உள்ளிட்ட சில படங்களில் ஜீவன் நடித்திருந்தார். இதில் நான் அவன் இல்லை படத்தில் பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு அசத்தலான வில்லன் நடிப்பில் ஜீவன் அசத்தியிருந்தார்.

கடைசியாக நடிகர் ஜீவன் நடித்த படம் பாம்பாட்டம். அந்த படமும் சரியாக போகவில்லை. ஜீவன் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாததால் ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்று விட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவன் மீண்டும் நடிகராக தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார்.

- Advertisement -

இப்போது லவ்வர் பாய் என்ற படத்தில் ஜீவன் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கிருத்தி ஷெட்ட நாயகியாக படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ மற்றும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் லவ்வர் பாய் படத்தில் நடிகர் ஜீவன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் ஜீவன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பல வில்லன் நடிகர்கள் காணாமல் போன நிலையில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவை போல நடிகர் ஜீவனும் பல படங்களில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்