நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் ராகவா லாரன்ஸ். முனி படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து காஞ்சனா சீரிஸ் படங்கள் ராகவா லாரன்ஸ்க்கு பெரிய வணிகத்தில் அதிக லாபத்தை கொடுத்து முன்னணி நடிகராகவும் மாற்றியது.
கமர்ஷியல் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த படம் கடைசியாக 2023ல் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை.
இதற்கிடையே அரசியலுக்கு வரப்போகிறேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். அதே நேரத்தில் தெருநாய்களுடன் மக்களை ஒப்பிட்டு பேசி கடும் விமர்சனத்திலும் சிக்கிக்கொண்டார். விஜய் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு அவர் ஆசைப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் 3 ஆண்டுகளாக அவர் நடித்த படம் எதுவும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லேட்டஸ்ட் அப்டேட் படி அவர் சில படங்களில் நடித்து வருவதாகவும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கால பைரவா என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ரமேஷ் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார். அடுத்து வெற்றிமாறன் கதையில் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் அவரே டைரக்ட் செய்து நடிக்கும் படத்தின் பெயர் துர்கா. மேலும் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் மகாவீர் கர்ணா என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தில் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அத்துடன் புல்லட் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்திருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கும் காஞ்சனா 4 என்ற ஹாரர் காமெடி திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





