- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் அப்பா இப்போ இல்லே, ஆனா என்னோட ஆசை இந்த படத்துல நிறைவேறிடுச்சு - மொத...

என் அப்பா இப்போ இல்லே, ஆனா என்னோட ஆசை இந்த படத்துல நிறைவேறிடுச்சு – மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி நெகிழ்ச்சி!

- Advertisement -

ஒரு நல்ல திரைப்படம் என்பது ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். கதை கதைக்களம் கதாபாத்திரங்கள் வசனங்கள் காட்சிகள் மூலம் இயக்குனர் ரசிகர்களின் மனதை தொட வேண்டும். அப்படிப்பட்ட படங்களின் வெற்றியை எந்த விதத்திலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு படமாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மொத ராத்திரி.

படத்தின் தலைப்பு சற்று வித்யாசமாக இருந்தாலும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் கதை. விருப்பமே இல்லாமல் மண வாழ்க்கையில் இணையும் கணவன் மனைவி இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து போக முயற்சிக்கின்றனர். ஆனால் சந்தர்ப்ப சூழலால் அவர்கள் எப்படி இணைகின்றனர் என்பதுதான் படத்தில் ஹைலைட்டாக உள்ளது.

- Advertisement -

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் ரிஷிகாந்த், இந்த படம் மூலமாக தான் தனக்கான அடையாளத்தை பெற்றிருக்கிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டோரதி என்ற படத்திலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிப்பாற்றல் கொண்ட ஹீரோ கிடைத்திருக்கிறார் என உறுதியாக சொல்லலாம்.

இந்த படத்தில் இயக்குனர் ராஜா கருப்பசாமியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மணப்பெண்ணின் காதலனாக வரும் அவர், தாலி கட்டிய பிறகும் தன்னுடன் ஓடி வரத் தயாரான தனது காதலியை என்னால் உன்னை சந்தோஷமாக வாழ வைக்க முடியாது என்று பரிதாபமாக கூறிவிட்டு விலகி செல்லும் காட்சியில் ரசிகர்களின் மனதை தொட்டு விடுகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற மொத ராத்திரி படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது. மொத ராத்திரி படத்தில் நடிகர் பகவதி பெருமாள் கையில் வைத்திருந்த புகைப்படம் உண்மையில் என்னுடைய அப்பாவோட போட்டோ. என் தந்தை இப்போது உயிருடன் இல்லை.

ஆனால் அவரை ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற ஆசை எனக்கு எப்போதுமே இருந்தது. அதனால்தான் நான் அவருடைய புகைப்படத்தை இந்த படத்தில் அந்த காட்சிகளில் பயன்படுத்தினேன் என்று இயக்குனர் ராஜா கருப்புசாமி கூறியிருக்கிறார். தன்னுடைய அப்பா இப்போது இல்லாத போதிலும் அவரது புகைப்படத்தை படத்தில் பயன்படுத்தி தன் அன்பை வெளிப்படுத்திய ராஜா கருப்புசாமியின் உணர்வை பாசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்