இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்த பிறகு கமல்ஹாசன் இன்னும் அடுத்த படத்தில் நடிக்காமல் இருக்கிறார். இதற்கிடையே ராஜ்ய சபா எம்பியாக உள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்திலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதிக கவனம் செலுத்தினார். டெல்லியில் பார்லிமென்ட் கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்துக்கொண்டார்.
மேலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சேயோன் தர்மன் ஆகிய படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகிறது.
இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் அபிராமி பசுபதி நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்த விருமாண்டி படத்தைப் போல ஒரு கிராமத்து சண்டை படமாக உருவாகிறது. ஏற்கனவே கண்டியர் என்று டைட்டில் வைக்க ஆசைப்பட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு அது முடியாமல் போனதால் விருமாண்டி என்று அந்த படத்துக்கு பெயர் வைத்தார்.
இப்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு சண்டியர் என கமல் டைட்டில் வைக்க இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பில் இதை உறுதி செய்யவில்லை.
எனினும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. நடிகர் கமல்ஹாசனை பொருத்தவரை வயதில் இளைய நடிகைகளை தனது படத்தில் ஜோடியாக கதாநாயகியாக நடிக்க வைப்பதில்லை என்ற முடிவில் அவர் ஏற்கனவே இருந்து வருகிறார். அதாவது தனக்கு ஜோடியாக மிகவும் இளமையான நடிகைகள் வேண்டாம் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த படத்தில் தனது பாலிசியை மறந்து விட்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஜோடியாக போட்டு கமல் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர்தான் ராஷ்மிகா மந்தனா. மற்றொருவர் தான் கமலுக்கு ஜோடியாக இருப்பார். ராஷ்மிகா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.





