இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவிக்கு வந்த 4 மாதங்களில் இவ்வளவு மோசமான விமர்சனங்களை எந்த ஒரு அரசும் சந்தித்தது இல்லை. முதன் முறையாக விஜய் தலைமையிலான தவெக அரசை தமிழக மக்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் விஜயை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக விஜய் முதல்வரான பிற்கு அவரது செயல்பாடுகள் நிர்வாகம் அமைச்சர்களின் செயல்பாடுகள் சட்டசபை நிகழ்வுகள் என எல்லாவற்றிலுமே மக்களுக்கு பலத்த ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக – திமுக மாறி மாறி ஆட்சி செய்த போதும் அதில் மக்கள் நலன் இருந்தது.
ஆனால் தவெக அரசை பொருத்த வரை சட்டம் ஒழுங்கு பிரச்னை தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு அதிகரித்து வரும் அத்யாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவை குறித்து எந்த அக்கறையான நடவடிக்கையும் இந்த அரசிடம் இல்லை.
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவனை விட மாட்டோம் என்று டயலாக் பேசிய முதல்வர் விஜய், மேட்டூர் அணையை திறக்க செல்ல ரூ. 6 கோடி செலவு, நடிகை திரிஷாவுடன் கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்று வந்த வகையில் ரூ. 9 கோடி செலவு, பட்டிணபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க ரூ. 1200 கோடி ஒதுக்கீடு, முதல்வர் அறையை புதுப்பிக்க ரூ. 5.58 கோடி செலவு, முதல்வர் அறையில் இருந்த இருக்கையை மாற்றி சோபா ரோலிங் சேர் வாங்கிய வகையில் ரூ. 32 லட்சம் செலவு என மக்களின் வரிப்பணம் பஞ்சாய் பறக்கிறது.
இந்த சூழலில் மதுராந்தம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்த அதிமுக எம்எல்ஏக்கள் இருவர், 20 நாட்களில் தவெக கட்சிக்கு தாவிய நிலையில் அவர்களே மீண்டும் வேட்பாளர்களாக இப்போது நிற்கின்றனர். பிரசாரத்துக்கு சென்ற அவர்களை தொகுதி மக்கள் விரட்டியடிக்கும் சூழலில் தவெக அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு மக்களை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர். ஆனால் மக்கள் தரப்பில் எதிர்ப்பு அலையே காணப்படுகிறது.
இதில் அமைச்சர் புஸ்லி ஆனந்த், இந்த தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, விஜய்தான் என்று பழைய டயலாக்கை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார். விஜய் நின்னாலே எங்க ஓட்டு விழாது. இந்த பழைய புளிச்சுப் போன டயலாக் எல்லாம் இங்கே இனிமே எடுபடாது என்று அவருக்கு காட்டமாக பேசி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னுமாடா இந்த ஊர் நம்மை நம்புது என்ற வடிவேல் டயலாக்கை கமெண்ட் செய்தும் பலர் கலாய்த்து வருகின்றனர்.





