- Advertisement -
Homeபொழுதுபோக்குகிழக்கு சீமையிலே படத்தில் அப்படி ஒரு கிளைமேக்ஸை வைத்த இயக்குனர் பாரதிராஜா, பதறிப்போன தயாரிப்பாளர் -...

கிழக்கு சீமையிலே படத்தில் அப்படி ஒரு கிளைமேக்ஸை வைத்த இயக்குனர் பாரதிராஜா, பதறிப்போன தயாரிப்பாளர் – அப்புறம் என்ன நடந்தது?

- Advertisement -

கடந்த 1993ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் கிழக்கு சீமையிலே. தாணு தயாரித்த இந்த படத்தில் விஜயகுமார் நெப்போலியன் ராதிகா வடிவேலு விக்னேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாசமலர் படத்துக்கு பிறகு அண்ணன் தங்கை பாசத்தை வைத்து வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு படமாக கிழக்கு சீமையிலே இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமாரின் அன்பு தங்கை ராதிகா, நெப்போலியன் திருமணம் செய்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் மாமன் மச்சான் என சந்தோஷமாக இருந்த குடும்பம், கோவில் திருவிழா சேவல் சண்டையில் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு ஜென்ம விரோதியாக விஜயகுமாரை நெப்போலியன் எதிர்ப்பதுதான் படத்தின் கதைக்களம்.

- Advertisement -

இந்த படத்தில் தனது தங்கைக்காக தன் சொத்துகளை எல்லாம் இழப்பார் விஜயகுமார். சொந்த விவசாய பூமியை தருவார். விதை நெல்லை தருவார். எல்லாவற்றையும் அன்பு தங்கைக்காக இழந்து நிற்பார். இதில் விஜயகுமார் மகனாக விக்னேஷ் நடித்திருந்தார். ஊரில் மைனராக பாண்டியன் நடித்திருப்பார்.

இதில் மானூத்து ஒச்சு என்ற கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார். பரிசல் ஓட்டும் பெண் விஜியை காதலிப்பார். அவரது காமெடி காட்சிகள் இதில் தனியாக ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான். இந்த படத்தில் சில காட்சிகளில் கும்பலில் ஒருவராக நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவும் இருப்பார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் தாணு கூறியதாவது, கிழக்கு சீமையிலே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமார் இறப்பது போன்ற ஒரு காட்சியை பாரதிராஜா எடுத்து வைத்திருந்தார். எனக்கு பார்த்தவுடன் பதறிப் போய்விட்டது. ஏனென்றால் படம் முழுவதும் தனது தங்கைக்கான நிலம் பூமி சொத்து விதை நெல் முதல்கொண்டு எல்லாவற்றையும் இழந்து நிற்பார் விஜயகுமார். கடைசியில் தனது உயிரையும் தங்கைக்காக அவர் விடுவது போல் இருந்தால் படம் நன்றாக இருக்காது.

அதனால் இத்தனையும் தனக்காக விட்டுக்கொடுத்த அண்ணனுக்காக ராதிகா கடைசியில் உயிரை விடுவது போல் இருந்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதன்பிறகுதான் அந்த கிளைமாக்ஸ் காட்சி ராதிகா இறப்பது போல் எடுக்கப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது என்று தயாரிப்பாளர் தாணு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்