- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை செஞ்சா என் கணவர் மகன் மகள் யாரையும் வீட்டுக்குள்ள விடமாட்டேன், நான்தான் அப்போ அவங்களுக்கு...

அதை செஞ்சா என் கணவர் மகன் மகள் யாரையும் வீட்டுக்குள்ள விடமாட்டேன், நான்தான் அப்போ அவங்களுக்கு வில்லி – நடிகை ரோஜா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

ஆந்திரா மாநிலம் நல்லூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. அவரை ரோஜா என்று பெயரை மாற்றி தனது செம்பருத்தி என்ற படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. முதல் படத்திலேயே பிரசாந்த் ஜோடியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை ரோஜா.

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் நடித்து அவரும் முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக ரஜினிகாந்துடன் வீரா உழைப்பாளி விஜயகாந்துடன் தமிழ் செல்வன் கார்த்திக்குடன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பிரபுவுடன் பரம்பரை என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

- Advertisement -

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏ அமைச்சராக இருந்த ரோஜா, இப்போது ஆட்சி மாற்றம் காரணமாக தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்துள்ளார். அன்பே டயானா படத்தை தொடர்ந்து லெனின் பாண்டியன் படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, இப்போது புரட்டாசி மாதம். நான் வீட்டில் பூஜை பண்ணினாலும் முக்கியமான விசேஷ நாட்களிலும் வீட்டில் நான் வெஜ் செய்ய மாட்டேன். அசைவம் கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா இருப்பேன்.

- Advertisement -

ஆனா இவங்களுக்கு ஒரு பீஸ் கண்டிப்பாக நான்வெஜ் வேணும். அப்பா மகன் மகள் 3 பேருக்கும் தினமும் நான்வெஜ் சாப்பிடணும். அந்த நேரத்தில் நான்தான் அவங்களுக்கு வில்லி. அப்போ அவங்க அப்பா கண்ஜாடையிலேயே அவங்க கிட்ட சொல்லிடுவார். நாம வெளியே போய் சாப்பிட்டுக்கலாம் என்று.

ஹேய் வெளியே எங்காவது போய் நான்வெஜ் சாப்பிட்டீங்கன்னா வீட்டுக்குள்ளயே விட மாட்டேன் என்று அவங்களை எச்சரிக்கை செஞ்சிடுவேன். இதெல்லாம் எல்லா வீட்டுலேயும் நடக்கிற ஒரு விஷயம்தான். ஆனா நான் கண்டிப்பா அவங்களை நான்வெஜ் சாப்பிட கூடாதுன்னு சொல்லிடுவேன் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்