அதிமுக – திமுக என இரண்டு திராவிட கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தன. இதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் 11 ஆண்டுகள் மட்டுமே. அவரது ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சியாக இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் கருணாநிதி ஜெயலலிதா ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் ஆட்சியில் மக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் விலைவாசியை கட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தாத நிலையில் ஊழல் லஞ்சம் பெருகிய காரணத்தால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பி, புதிதாக அரசியல் களத்துக்கு வந்த தவெக கட்சிக்கு 3ல் ஒரு பங்கு வாக்காளர்கள் 1.70 கோடி பேர் விசிலுக்கு ஓட்டுப் போட்டு விஜயை 108 இடங்களில் ஜெயிக்க வைத்தனர்.
ஆனால் இப்போது 4 மாதங்களை தவெக ஆட்சி கடந்த நிலையில் திமுக – அதிமுக ஆட்சியை விட 1000 மடங்கு மோசமான ஆட்சியாக தவெக ஆட்சியை மக்கள் விமர்சிக்கின்றனர். அத்யாவசிய மளிகை பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தவெக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களின் அதிருப்தி குறித்து சிறிதும் கவலையின்றி லண்டன் பயணம் 1200 கோடி ரூபாயில் கடற்கரை ஓரத்தில் தலைமை செயலகம் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என தவெக அரசின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளிலும் ஏமாற்றங்களே மக்களுக்கு மிஞ்சுகிறது. சட்டசபை நடவடிக்கைகளிலும் தவெக அமைச்சர்களின் பேச்சு மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்ட அரசு போக்குவரத்து புதிய பஸ்களுக்கு சிவப்பு மஞ்சள் நிறங்களில் அதாவது தவெக கட்சி கொடி நிறத்தில் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது. விஜய் செல்லும் பிரசார வேன் போலவே அரசு பஸ்களின் நிறங்களும் காணப்படுவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிமுக திமுக ஆட்சி காலத்தில் கூட இப்படி அரசு பஸ்களுக்கு கட்சிக்கொடி நிறங்கள் தரப்பட்டது இல்லை.
அரசு போக்குவரத்து பஸ்களுக்கு தவெக கட்சிக்கொடி நிறங்களை மாற்ற இது என்ன அவர் அப்பன் வீட்டு காசா? ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று சொன்ன விஜய், மக்கள் வரிப்பணத்தை தொட்டால் விடமாட்டேன் என டயலாக் பேசிவிட்டு அரசு பஸ்களில் மக்கள் வரிப்பணத்தில் தவெக கட்சி கொடி நிறத்தை பூசும்போது அந்த வாய் கூசவில்லையா? என்ற கடும் விமர்சனம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.





