தமிழ் சினிமாவில் வணிக ரீதியான வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய். மொக்கையான கதைக்களத்தில் உருவான படமாக இருந்த போதிலும் விஜய் நடித்த படங்கள் வணிக ரீதியான அதிக லாபத்தை தந்த படங்களாக இருந்தன. அதனால் தான் வாரிசு மாஸ்டர் லியோ பீஸ்ட் தி கோட் போன்ற படங்கள் கணிசமான லாபத்தை கொடுத்தது.
ஆனால் கடைசியாக விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரூ. 300 கோடி வசூலை தாண்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. அந்த படம் வெளியாகி மாதங்கள் கடந்தும் இன்னும் ஜனநாயகன் படத்தின் முழுமையான வசூல் நிலவரம் குறித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஜனநாயகன் மட்டுமே தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்து விட்டார். இந்த சூழலில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். வருகிற அக்டோபர் 2ம் தேதி சிக்மா படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் சிக்மா படத்துக்காக பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் பங்கேற்று பேசி வருகிறார். அதில் தனது குடும்பம் சினிமா ஆர்வம் எதிர்கால திட்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். சிக்மா படம் தனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தரும் என்றும் கூறி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது, அப்பாவிற்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அவரிடம் நிறைய நகைச்சுவை உணர்வும் உள்ளது. அவரிடம் எங்களுக்கு பிடித்த விஷயம் அதுதான். ஒருவேளை அவரை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து ஜாலியான ஒரு காமெடி படம் எடுப்பேன்.
ஏற்கனவே அவர் நடித்து வெளியான படங்களில் பத்ரி படத்தை இரண்டாம் பாகமாக எடுத்தால் நன்றாக இருக்கும். அந்த படத்தில் சிக்மா படத்துக்கான ஒரு கதையம்சம் இன்னும் உள்ளது என்று அந்த நேர்காணலில் இயக்குனர் தேசம் சஞ்சய் கூறியிருக்கிறார். மேலும் போக்கிரி கில்லி போன்ற படங்களை 2ம் பாகமாக எடுக்க விரும்பவில்லை. பத்ரி படம்தான் எனக்கு பிடித்தமான 2ம் பாகம் எடுப்பதற்கான சரியான படம் என்றும் ஜேசன் சஞ்சய் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





