- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்நியன் மாதிரி அப்போ பேசிட்டு இப்போ அம்பி மாதிரி பம்மறீங்களே? இதுதான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற...

அந்நியன் மாதிரி அப்போ பேசிட்டு இப்போ அம்பி மாதிரி பம்மறீங்களே? இதுதான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற லட்சணமா? – முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின்!

- Advertisement -

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் விஜய் திமுக குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். தமிழக முதல்வரான பிறகும் திமுக குறித்தும் திமுக தலைவர் குறித்தும் விஜய் பேசி வருவது மக்களை சலிப்படைய செய்திருக்கிறது. 4 மாதங்களாகியும் இன்னும் திமுக குறித்தே பேசி விஜய் அரசியல் செய்வது, மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.

விஜய் பேசியது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, தி.மு.க. மாதிரி படிப்படியா தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன் என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலி என அம்பி மோடில் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?

- Advertisement -

உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே. நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம் வெற்றி அரிவாள் வெட்டு திட்டம் வெற்றி விலைவாசி உயர்வு திட்டம் வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம் வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்.

பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்- என ஹை பிட்சில் ல் கத்தினீர்களே? உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல.

- Advertisement -

எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்… பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்- என்றுதான் நான் சொன்னேன்.

உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால் முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா? என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் சிஎம் சார் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்