தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் முடிந்து தமிழக முதல்வராகி 4 மாதங்கள் கடந்த போதிலும் சரி, சட்டசபையிலும் பிரசார மேடையிலும் விஜய் நின்று விட்டால் போதும். அவர் பேசுவதும் பேச நினைப்பதும் திமுக மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி மட்டும்தான். இது தமிழக மக்களை இப்போது எரிச்சலடைய வைத்திருக்கிறது.
அதிலும் அதிமுக பற்றி பேசும்போது அதிமுக என்று சொல்வது கேவலம் என்று 55 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அந்த கட்சியை எம்ஜிஆர் துவங்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா என்ற ஆளுமை ஆட்சி செய்த அந்த கட்சியை மற்றும் சிலர் கட்சி என்றுதான் விஜய் குறிப்பிடுகிறார். தவெக கட்சி துவங்கி இன்னும் 3 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் அதிமுக கட்சியை மற்றும் சிலர் என்று நக்கலாக விமர்சிக்கும் விஜய், அந்த கட்சியில் இருந்து தவெக கட்சிக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள் திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் உடுமலை ராதாகிருஷ்ணன் எம் சி சம்பத் கேவி ராமலிங்கம் ஆனந்தன் கடம்பூர் ராஜூ பச்சைமால் என்ஆர் சிவபதி வெல்லமண்டி நடராஜன் வைகை செல்வன் வளர்மதி என்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 11 பேருக்கு தவெக கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவியை தந்திருக்கிறார்.
இவர்கள் எல்லாமே அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் செய்தவர்கள் என்ற புகார்களில் சிக்கியவர்கள். அன்றைய முதல்வர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் இந்த 11 பேரில் சிலர் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அமைச்சர் பதவியை கட்சி பதவியை பறித்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களை அதிமுக முக்கிய நிர்வாகிகளை தவெக பக்கம் தாவிய பிறகு அவர்களுக்கு தவெக கட்சியில் முக்கிய பதவிகளை அள்ளி வழங்கி, அவர்களை தன்வசப்படுத்தியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் அதிமுக வை மற்றும் சிலர் கட்சி என்று எகத்தாளமாக மேடைகளில் பேசி வருகிறார்.
அத்துடன் தவெக தூயசக்தி திமுக தீயசக்தி என்று ஆவேசமாக பேசும் விஜய், தவெக கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியில் உள்ள முன்னாள் அதிமுக நிர்வாகிகளான 11 பேரும் ஏற்கனவே பல ஊழல் புகார்களில் சிக்கியவர்கள். அவர்கள் தவெகவில் இணைந்தவுடன் புனிதமானவர்களாக தூய சக்தியாக மாறிவிட்டார்களா மிஸ்டர் சிஎம் சார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.





