- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகர் சங்கம்...

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நடிகர் சங்கம் கோரிக்கையை நிராகரித்தது ஏன்? – அதுதான் காரணமா?

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நிச்சயமாக நடக்கும் என்றும் விரைவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினா்.

அப்போது, தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த எங்களுக்கும் ஆசை தான். ஆனால் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அப்போது கூறினர். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஏன் மறுத்தார் என்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

பொதுவாக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ள ரஜினிக்கு இந்த புகழ்பாடும் ஒரு விஷயம் பிடிக்காது. சினிமாவில் ஹீரோவாக நடித்து அவர் பெற்ற புகழை விட ஒரு நாளில் நடிகர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் பெரிய புகழும் கூடுதல் மதிப்பும் அவருக்கு கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

அத்துடன் இப்போது தமிழக முதல்வராக விஜய் இருக்கிறார். நிச்சயமாக ரஜினிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை. தவெக அரசு சார்பில் அமைச்சர் யாரேனும் பங்கேற்க வாய்ப்புள்ளது. அப்போது தவெக அரசு குறித்து மரியாதைக்காகவாவது ரஜினிகாந்த் விஜயை பற்றி பேச வேண்டும். பொய்யாக பாராட்டி புகழ வேண்டும். இது ரஜினிக்கு ஒத்துவராத விஷயம்.

ஏற்கனவே விஜய் ரசிகர்களால் ரஜினி பலவிதங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் ரஜினி நிச்சயமாக விஜயை புகழ்ந்தோ தவெக அரசை பாராட்டியோ பேச மாட்டார். விஜய் முதல்வரான பிறகு சம்பிரதாயத்துக்காக முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று ஏற்கனவே வெளிப்படையாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த காரணங்களால் தான் ரஜினி நடிகர் சங்கம் நடத்த விரும்பிய பாராட்டு விழாவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நாசர் விஷால் போன்றவர்களாக இல்லாமல் விஜயகாந்த் சரத்குமார் ராதாரவி போன்ற ஆளுமை மிக்க கலைஞர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்து, திமுக ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினி பாராட்டு விழாவுக்கு சம்மதம் தெரிவித்திருப்பார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தனக்கு பாராட்டு விழா நடத்துவது தேவையில்லாத விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பதாலே நடிகர் சங்கத்தின் பாராட்டு விழா கோரிக்கையை நாசூக்காக ரஜினிகாந்த் தவிர்த்து விட்டார் என்ற தகவல் கசிந்துள்ளது.

சற்று முன்