- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தர தயாரான பிரபல நடிகை - இனி திரைப்பட விழாக்களில்...

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தர தயாரான பிரபல நடிகை – இனி திரைப்பட விழாக்களில் ஹாய் மச்சான்ஸ் குரலை கேட்கலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை நமீதா. விழா மேடைகளில் தனது ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைப்பது அவரது ஸ்டைலாக உள்ளது. கோலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை நமீதா, திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் வெளியான உடற்பயிற்சி வீடியோவில் உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருவதாகவும் இயக்குனர்களிடம் தனக்கேற்ப கதை கேரக்டர்கள் குறித்து கேட்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்