கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடந்த முதல் கட்சி மாநில மாநாட்டில் திமுக என்னுடைய அரசியல் எதிரி பாஜக என்னுடைய கொள்கை எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் திமுகவை பாயாசம் என்றும் பாஜகவை பாசிசனம் என்றும் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து தவெக கூட்டங்களிலும் பிரசார மேடையிலும் திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை செய்த விஜய், ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் திமுக ஒரு தீயசக்தி என்று விமர்சனம் செய்தார். மேலும் ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்றும் டயலாக் பேசி அதை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமான பராசக்தி படத்துக்கு கதை வசனம் எழுதியவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தான் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் தீயசக்தி என்று விஜய் பேசிய டயலாக்கை தவெக கட்சியினர் தாரக மந்திரமாக பிடித்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்தனர்.
அதே வேளையில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் 41 பேர் தவெக கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர். பதட்டமான சூழல் நிலவிய அப்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் அங்கிருந்து சென்னைக்கு உடனடியாக விமானம் மூலம் விஜய் சென்றுவிட்டார். மேலும் 3 மாதங்கள் வரை வெளியிலும் வராமல் இருந்தார் என்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
ஆனால் தவெக பிரசார கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி பலியாக அன்றைய ஆளுங்கட்சி திமுக தான் காரணம் என்றும் விஜய் அன்றைய முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுப்பினார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் கரூரில் இருந்து ஓட்டம் பிடித்த ஓடுகாலி விஜய் என்று திமுகவினர் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் மதுராந்தகரம், தாராபும் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஓம் காளி ஜெய்காளி என்ற டயலாக் சொல்ல அங்கு திரண்டிருந்த மக்கள் ஓம் காளி ஜெய்காளி விஜய் ஒரு ஓடுகாலி என்று கோஷமிட்டனர். அது தற்போது இணையத்தில் டிரண்டிங் ஆகி வைரலாகி வருகிறது. நேற்று 27ம் தேதி கரூர் சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் நேற்று இந்த சம்பவத்தை உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.





