- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு பிறகு அந்த இயக்குனரின் காலை தொட்டு முத்தமிட வேண்டும் என ஆசைப்படுகிறேன் - நெகிழ்ந்து...

இளையராஜாவுக்கு பிறகு அந்த இயக்குனரின் காலை தொட்டு முத்தமிட வேண்டும் என ஆசைப்படுகிறேன் – நெகிழ்ந்து போய் பேசிய இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10வது படமாக சமீபத்தில் வெளியான படம் டோரதி. கலவையான விமர்சனங்களுடன் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மொத ராத்திரி பட நாயகன் ரிஷிகாந்த் மற்றும் நடிகர் சனந்த் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து பாடல் இணையத்தில் டிரண்டாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் பாலினம் குறித்த கருத்தை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளது. டோரதி படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, என் பிறந்தநாளை மகளுடன் கொண்டாடுவதற்காக கனடா வந்தேன். டோரதி படத்தை கனடாவில் என் மகளுடன் பார்த்தேன். இந்த படம் என் மனதை தொட்டு இருக்கிறது.

- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் பார்க்க வேண்டிய படம். வெறும் திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு கடந்து செல்லக்கூடிய படமல்ல இது. படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நம் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த சமூகத்தில் ஆண்கள் என்ற பெயரில் பெண்களுக்கும் பெண்களாக உருமாறிய திருநங்கைகளுக்கும் நாம் எவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறோம் என்பதை இந்த படம் தோலுரித்து காட்டுகிறது.

திருநங்கையை நாம் பார்க்கும் விதம் அவர்களை மனிதர்களாக பார்க்காமல் இழிவாக பார்க்கும் மனநிலையை இந்த படம் சிந்திக்க வைக்கிறது. இரவில் ஒரு திருநங்கையை பார்க்கும்போது அவளை ஒரு அசிங்கமான எச்சலாகவும் விலங்கை விட கேவலமானவராகவும் பார்த்து பழகிவிட்டோம். அதை இந்த படம் சுட்டிக்காட்டுகிறது. பெண்களை இவ்வளவு நாட்களாக ஏதோ ஒரு பெயரில் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் அல்லது ஆண் என்ற பெயரில் மறைத்துக் கொண்டே இருக்கிறோம். இனிமேல் அதைச் செய்ய முடியாது.

- Advertisement -

நான் ஒரு காட்சியை உருவாக்கும்போது எவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்வானோ என்னை விட 100 மடங்கு அதிகமாக இந்த படத்திற்காக கார்த்திக் சுப்பராஜ் உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பார்ப்பதற்கு சற்று மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும் தர்மத்துடனும் நியாயத்தோடும் சிந்தித்தால் அதன் ஆழம் புரியும்.

இந்திய திரைப்பட வரலாற்றில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக டோரதி நிச்சயம் இடம்பெறும். இது தலையில் வைத்து கொண்டாட வேண்டிய மிக முக்கியமான மென்மையான கலை படைப்பு. என் வாழ்க்கையில் நான் காலை தொட்டு முத்தமிட்ட மனிதர்களில் இசைஞானி இளையராஜா ஒருவர். என் அம்மாவின் காலை தொட்டு கூட நான் முத்தமிட்டதில்லை. இளையராஜாவுக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் காலை தொட்டு தான் நான் முத்தமிட வேண்டும் என்று மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்