- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம ஒரே குடும்பம், நீங்க இதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்றீங்க? - வெங்கட்பிரபு விளக்கத்துக்கு ரிப்ளை...

நாம ஒரே குடும்பம், நீங்க இதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்றீங்க? – வெங்கட்பிரபு விளக்கத்துக்கு ரிப்ளை தந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ்பிக்சன் படத்தை வெங்கட்பிரபு இயக்க தயாராக இருந்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் டிராப் ஆனது. அமரன் படம் அபார வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரன் கூறுகையில், வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தை நம்பி இருந்தான். அதனால தான் அவன் அடுத்த படம் லேட் ஆகுது. வெங்கட் பிரபு கதை எல்லாம் ரெடி பண்ணிட்டான். அந்த நடிகரும் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் அந்த நடிகரோட ஒரு படம் ஹிட்டான உடனே அடுத்த இயக்குனரோட ரெண்டு படம் எடுத்துகிட்டு தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்று சொல்லிட்டார்.

- Advertisement -

இது உனக்கு தேவையா? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இதுக்கு மேல அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்ன உதாசீனப்படுத்தினால் நீயும் அவனை உதாசீனப்படுத்து. அவன் படத்தை நீ பண்ண கூடாதுன்னு சொன்னேன் என்று இயக்குனர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கோபமாக கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஒரு பதிவில், எஸ்கே எனது நண்பர். எனக்கு சகோதரர் போன்றவர். பல்வேறு காரணங்களால் அவருடன் நான் இணைந்து பணியாற்ற இருந்த படம் நடக்காமல் போய்விட்டது. அவ்வளவுதான். இதனால் எங்களுக்கு இடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை. சரியான நேரம் நல்ல கதை வரும்போது நாங்கள் சேர்ந்து பணியாற்றுவோம்.

- Advertisement -

மகனின் படம் தாமதம் அடைவதை பார்த்து ஒரு தகப்பனாக என் தந்தை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உண்மையாக நடந்தது என்ன என்பது அவருக்கு தெரியாது. படங்கள் தொடர்பாக அவரிடம் பகிர்வதும் இல்லை. இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்று அந்த பதிவில் இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் உடனடியாக தந்த ரிப்ளையில் கூறியிருப்பதாவது, சார் நம்ம ஒரு குடும்பம். இதுக்கு நீங்க சீரியஸா ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க? வாழ்த்துக்கு நன்றி. உங்களின் அடுத்த படத்திற்கு வாழ்த்துகள். நான் இதை முன்பே கூறியிருக்கிறேன். இருந்தாலும் இப்போது சொல்கிறேன். நான் எப்போதுமே வெங்கட் பிரபுவின் ரசிகன். உங்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன் என்று அந்த பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்