- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படத்துக்கு ரூ. 100 கோடி பைனான்ஸ் செய்த 2 முன்னணி தயாரிப்பாளர்கள் - போட்ட...

அஜீத்குமார் படத்துக்கு ரூ. 100 கோடி பைனான்ஸ் செய்த 2 முன்னணி தயாரிப்பாளர்கள் – போட்ட காசை எடுத்தா தான் ஏகே வண்டி இனி ஓடும்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான 50வது படம் மங்காத்தா. இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அஜீத்குமார் நடிப்பில் வெளியான படங்கள் வணிக ரீதியான வெற்றிப் படங்களாக சில இருந்தாலும் தியேட்டரிக்கல் அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக எதுவும் இல்லை.

அத்துடன் நடிகர் விஜய் போட்டியாக இருந்த வரைக்கும் அவர்களுக்கு இடையிலான போட்டியும் சவாலும் அஜீத் படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்து படத்தை ஓட வைத்தது. அஜீத் ரசிகர்களும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை தந்த தல தல என்று கொண்டாடினர்.

- Advertisement -

ஆனால் இன்றைய நிலவரப்படி நடிகர் அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் மற்றும் இமேஜ் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஏனென்றால் ஹீரோயிசம் காட்டும் படங்களை மக்கள் ஒதுக்க துவங்கி விட்டனர். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் சின்ன படங்களாக இருந்தாலும் பெரிய வெற்றியை பெறுகிறது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளாக தயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் தனது 64வது படத்தை நடிகர் அஜீத்குமாரே, தனது மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த படத்துக்கு முன்னணி தயாரிப்பாளர்கள் சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் ஜஸ்வந்த் பண்டாரி ஆகிய 2 பேரும் 100 கோடி ரூபாய் வரை இந்த படத்துக்கு பைனான்ஸ் தர முன் வந்துள்ளனர். அவர்களின் நிதி ஆதரவால் தான் இந்த படம் உருவாக உள்ளது. நிச்சயம் இது அஜீத்குமார் படம் உருவாக பெரிய அளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இந்த படம் நடிகர் அஜீத்குமாருக்கு பெரிய வெற்றிப் படமாக இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நடிகர் மற்றும் முதல்வர் விஜயுடன் அஜீத்குமார் காட்டிய நெருக்கத்தால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர். நிச்சயமாக அஜீத் ரசிகர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் வெற்றிக்கரமாக ஓடி லாபம் கண்டால் மட்டுமே அஜீத்குமாரின் திரை பயணம் நல்ல முறை ஓடும் என்பதே உண்மை.

- Advertisement -

சற்று முன்