தாராபுரத்தில் நேற்று முன்தினம் தவெக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் தவெக கட்சி தலைவர் முதல்வர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கோழைகளின் கடைசி ஆயுதம் கண்ணீர் என்று சொல்வதை போல, தோல்வி பயத்தில் மேடையில் கண்ணீர் விட்டு அழுது புலம்பினார் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா.
அருகில் இருந்த முதல்வர் விஜயும் அவருக்கு தோளை பிடித்து ஆதரவு காட்டி சமாதானம் செய்தார். பாசமலர் அண்ணன் தங்கை காட்சியை மேடையில் இப்படி ஓவராக நடித்து காட்டிட்டாங்க என்றுதான் மக்கள் கிண்டலாக விமர்சித்தார்களே தவிர இதை பார்த்து யாரும் நெகிழ்ச்சி ஆனதாக தெரியவில்லை.
தன்னை நம்பி ஓட்டு போட்ட மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சிக்கு தாவியவர்தான் சத்யபாமா. மேலும் இதற்காக பல கோடி ரூபாய் அவருக்கு தரப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கட்சி கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா, தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, போன தேர்தலில் அதிமுக வேட்பாளராக தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமாவுக்கு நான் பிரசாரம் செய்தேன். அப்போது, இத்தனை வருஷமா நான் கட்சியில் இருக்கேன். கட்சியை தான் நம்பியிருக்கேன்.
இபிஎஸ் அண்ணன் சீட் கொடுத்தார். எப்பவும் அண்ணனுக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன் என்று இதே பிரசார வேன்ல உட்கார்ந்துட்டு சத்யபாமா பேசினாங்க. அண்ணனும் வாய்ப்பு கொடுத்தார். எல்லோரும் ரெட்டை இலை சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டாங்க. அம்மாவுக்காக ஓட்டுப் போட்டாங்க. சத்யபாமாவுக்காக ஓட்டு போடலே.
ஓட்டுப் போட்ட மக்களை ஏமாத்தி 15 நாளில் கட்சி மாறினவங்களுக்கு எதிர்ப்பு வராமல் தொகுதியில் வேற என்ன வரும்? எதுக்காக கட்சி மாறினாங்க? இத்தனை வருஷமா இல்லாத குறை அதிமுகவில் இப்போ என்ன கண்டுபிடிச்சாங்க? மக்களோட பர்மிஷன் கேட்டுட்டு அவங்க கட்சி மாறினாங்களா? கிடையாது. அதனால் மக்கள் கண்டிப்பா அவங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவாங்க என்று நடிகை விந்தியா பேசியிருக்கிறார்.





