- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லோரும் டாக்டர் இன்ஜினியர் ஆகணும்ன்னு சொன்னாங்க, நான் மட்டும் அப்படி சொன்னேன், எல்லோருமே சிரிச்சாங்க -...

எல்லோரும் டாக்டர் இன்ஜினியர் ஆகணும்ன்னு சொன்னாங்க, நான் மட்டும் அப்படி சொன்னேன், எல்லோருமே சிரிச்சாங்க – ஓபனாக பேசிய இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

ஒருமுறை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது, 60 வருஷத்துக்கு முன்னாடி கிளாஸ் ரூம்ல வாத்யார், எதிர்காலத்துல நீ என்னவா வரப்போறே அப்படீன்னு வரிசையா ஒவ்வொரு பையனா கேட்டுட்டு வர்றாங்க.

அப்போ ஒருத்தன் இன்ஜினியர் ஆகணும் ஒருத்தன் டாக்டர் ஆகணும் ஒருத்தன் ஏர்போர்ஸ்ல சேரணும் ஒருத்தன் மிலிட்ரியில் சேர்ந்து பெருசா வரணும் அப்படீன்னு சொல்லி அவங்க அவங்க அபிப்ராயத்தை சொல்லிட்டு இருந்தாங்க. நான் அப்போ எந்திரிச்சு நீ என்ன ஆகணும் என்று கேட்டப்போ, எம்ஜிஆர் சிவாஜி மாதிரி ஒரு நடிகர் ஆகணும் என்று சொன்னேன்.

- Advertisement -

அப்போ அங்கே இருந்த கூடப்படிச்ச பசங்க எல்லோருமே சிரிச்சாங்க. ஆனா எங்க ஸ்கூல் மாஸ்டர் மட்டும் ஏண்டா சிரிக்கறீங்க? அவன் மனசுல இருக்கறதை அவன் சொல்லிட்டான். முயற்சி பண்ணினால் யாரு வேணா என்ன வேணா ஆக முடியும். அப்படீன்னு சொல்லி என்கரேஜ் செய்தார்.

இன்னிக்கு நான் இப்படி ஒரு பொசிசன்ல இருக்கேன் என்றால் அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்தான். அதனால் என்றென்றைக்கும் நான் அந்த டீச்சர்ஸ்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

- Advertisement -

படிக்கிற காலத்துல படிக்கற விஷயங்கள் மட்டுமில்லாமல் மற்ற நிறைய விஷயங்கள் எனக்கு அட்வைஸ் பண்ணி இருக்காங்க. அதுவந்து என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதுல வந்து முக்கியமான ஒண்ணு, நீ சந்திக்கிற ஒவ்வொரு மனுஷனும் உனக்கு ஒரு ஆசான். அவரிடம் கற்றுக்கொள்ள கண்டிப்பாக ஏதேனும் ஒன்று அவரிடம் இருந்தே தீரும் அப்படின்னு சொன்னாங்க.

அதைதான் இன்னிக்கு வரைக்கும் யாரை பார்த்தாலும் அவங்ககூட பேசற போது அதை தான் நான் அப்சர்வ் பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பாக நம்மை விட ஏதாவது ஒரு கெட்டிக்காரத்தனமான விஷயங்கள் மற்றவர்களிடம் இருக்கும் என்று கூர்ந்து கவனிச்சிக்கிட்டு இருப்பேன். அது இன்னும் என்னிடம் தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்குது என்று அந்த விழாவில் கே பாக்யராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்