தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர இயக்குனராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய முதல் படம் பாரதி கண்ணம்மா. இந்த படம் அபாரமான வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து சேரன் இயக்கிய படங்கள் எல்லாமே சமூக யதார்த்த கதைக்களமாக இருந்தது அதிக கவனம் பெற்றது.
சேரன் இயக்கத்தில் அடுத்து வெளியான பொற்காலம் தவமாய் தவமிருந்து வெற்றிக்கொடி கட்டு மாய கண்ணாடி பொக்கிஷம் பாண்டவர் பூமி ஆட்டோகிராப் என அவரது படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாா்.
இயக்குனர் சேரன் அவர் இயக்கிய சில படங்களில் அவரே கதையின் நாயகனாக நடித்த நிலையில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் ஹீரோவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு முறை போட்டியாளராக கலந்துக்கொண்ட அவர் சேரனின் ஜர்னி (பயணம்) என்ற வெப் சீரிஸ் டைரக்ட் செய்திருக்கிறார். விரைவில் ஜெயா டிவியில் தொகுப்பாளராகவும் சேரன் பணிபுரிய இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியானது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கூறியதாவது, எம்ஜிஆர் ஒரு மறக்க முடியாத மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு சரித்திரம் என்றால் அது எம்ஜிஆர். எனக்கு அப்போ அவரை வந்து பிடிக்கலே. எனக்கு சிவாஜிதான் பிடிக்கும். சிவாஜி நடிப்பு தான் பிடிக்கும்.
சிவாஜியோட மிகத் தீவிரமான ஒரு ரசிகன் நான். எம்ஜிஆரோட சிறப்புகள் எனக்கு அப்போ தெரியலே. நான் சென்னை வந்து இயக்குனராகி நான் இந்த சமூகத்தையும் இந்த கட்டமைப்பையும் சினிமாவுக்குள் இருந்து அவர் எப்படி வந்திருக்கிறார் என்று பார்க்கும் போது பிரமிப்பான ஒரு சரித்திர நாயகன் என்று சொல்வதை விட சரித்திர புருஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரித்திர புருஷன் என்றால் அது எம்ஜிஆர்தான். என்னை பொருத்த வரை அவர் நினைத்து எல்லாம் செய்திருக்கிறார். முடியாது என்று நினைத்ததை எல்லாம் அவர் செய்து காட்டிய மனிதர். அந்த கட்ஸ் எம்ஜிஆரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அந்த கட்ஸ் தான் என்று இயக்குனர் சேரன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





