- Advertisement -
Homeபொழுதுபோக்குவீடு வீடாக டிபன் பாக்ஸில் ரூ. 5 ஆயிரம் வினியோகம், தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் விஜய்...

வீடு வீடாக டிபன் பாக்ஸில் ரூ. 5 ஆயிரம் வினியோகம், தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் விஜய் கட்சி பட்டுவாடா – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக – திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதாக தகவல் பரவியது. குறிப்பாக அதிமுக தரப்பில் ரூ. 2 ஆயிரம் வரையும், திமுக தரப்பில் ரூ. 2500 வரையும் தரப்படுவதாக கூறப்பட்டது. பல தொகுதிகளில் அப்படி கட்சி நிர்வாகிகள் மூலமாக பணம் தரப்பட்டதை கட்சி நிர்வாகிகளே உண்மை என்றும் கூறினர்.

ஆனால் திமுக – அதிமுக கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்ட ஏராளமான மக்கள், அந்த கட்சிகளுக்கு ஓட்டுப் போடாமல் புதிதாக அரசியல் களத்துக்கு வந்த விஜய்க்கு தவெக கட்சிக்கு விசில் சின்னத்தில் ஓட்டுப் போட்டனர். தவெக தரப்பில் தேர்தலின் போது யாருக்கும் பணம் கொடுத்ததாக தகவல் இல்லை.

- Advertisement -

தவெக கட்சி சந்தித்த முதல் தேர்தலில் அதுவும் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை. அதுவும் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தந்த திமுக – அதிமுக கட்சிகளுக்கு ஆதரவு தராமல் விஜய்க்கு மக்கள் ஓட்டுப் போட்டது பெரிய மாற்றமாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் விஜய் அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் இன்று மதுராந்தகம் தொகுதியில் 39 இடங்களில் ரோடு ஷோ செய்தும் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

- Advertisement -

ஆனால் இந்த முறை தவெக கட்சிக்கு மக்களிடம் ஆதரவும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இல்லை. விஜய் மேடைகளில் பேசுவது எல்லாமே பொய்தான். உண்மையில் அவரது ஆட்சி திமுக – அதிமுகவை விட மிக மோசமாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தவெக தரப்பில் இடைத்தேர்தல் தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓட்டுக்கு காசு கொடுக்கும் ஒரு கலாசாரத்தை விஜய் வந்து மாற்றிவிட்டார் என்ற தோற்றம் முதலில் இருந்தது. ஆனால் இப்போது ஓட்டுக்கு அதிகமாக பணம் கொடுப்பதே தவெக தான். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 5 ஆயிரம் ரூபாய் வரை டிபன் பாக்ஸில் வைத்து தருவதாக கூறுகின்றனர் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்