முதல்வர் விஜய் எப்படியாவது இடைத்தேர்தல் நடக்க உள்ள மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் ஜெயித்துவிட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆனால் வெற்றி வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்கிற அளவுக்கு தொகுதிகளில் வெளியான கள நிலவரங்கள் அதிர்ச்சியை தந்திருக்கிறது.
ஏனெனில் தவெக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் மக்களின் அதிருப்தியை தவெக பெற்றிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு கிடைத்த பலத்த ஏமாற்றம் சட்டசபையில் முதல்வர் விஜய் தவெக அமைச்சர்களின் நடவடிக்கை என்றும் ஆணவப்போக்கு மக்களுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திமுகவை தீயசக்தி என்று சொல்லும் விஜய், திமுக ஆதரவில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சியே அமைத்திருக்கிறார். மேலும் எம்ஜிஆர் துவக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா என்கிற ஆளுமை ஆட்சி செய்த கட்சியை மற்றும் சிலர் என்று நக்கலாக விஜய் கூறுகிறார்.
அதே நேரத்தில் இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏக்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்டு மாநில துணை செயலாளர் பதவிகளை அவர்களுக்கு தந்திருக்கிறார். இப்படி திமுக ஆதரவில் அதிமுகவினரை சேர்த்துக்கொள்ளும் விஜயின் ஏமாற்று வேலை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகி விட்டது.
இந்த நிலையில் தாராபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு தவெக பிரசார கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமா, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு கட்சி மாறிய என்னை ஒரு பெண் என்றும் பாராமல் திட்டுகின்றனர் என்று அழுது கண்ணீர் விட்டார். உடனே விஜயும் தோளை பிடித்து ஆதரவு காட்டி சமாதானம் செய்தார்.
இதையடுத்து மீண்டும் விஜய் நாளை தாராபுரத்துக்கு பிரசாரம் செய்ய வருகிறார். ரோடு ஷோ மூலம் 25 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் விஜய் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வருகிறார். கடந்த முறை ரோடு வழியாக காரில் வந்த விஜய் 80 கிமீ., தூரத்துக்கு டிவைடர் வைத்து விமர்சனத்தில் சிக்கியதால் இந்த முறை ஹெலிகாப்டரில் தாராபுரம் வருகிறார்.





