தவெக கட்சியின் தலைவர் சிஎம் விஜய் தொடர்ந்து அதிமுக குறித்து விமர்சித்து பேசி வருகிறார். அவர் பங்கேற்கும் தவெக கூட்டங்களில் அதிமுகவை மற்றும் சிலர் கட்சி என்று குறிப்பிடுகிறார். மேலும் நீர்த்து போன கட்சி தூர்ந்து போன கட்சி என்றும் பேசி வருகிறார். அதே நேரத்தில் அதிமுக சார்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்களை தனது தவெக கட்சியில் சேர்த்து வருகிறார்.
அப்படி அதிமுகவினரை தனது கட்சியில் சேர்ப்பது மட்டுமின்றி அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை தந்தும் வருகிறார். சமீபத்தில் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் சென்ற 11 முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக மாநில துணைச் செயலாளர்கள் பதவியை விஜய் கட்சி தலைமை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எட்பபாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, திரு விஜய் அவர்களே உங்களுக்கு ஆப்பு அடிக்க போறது அதிமுகவில் இருந்து உங்க கட்சிக்கு வந்தவங்க தான். ஒரிஜினல் கட்சி அண்ணா திமுக கட்சி.
அதிமுகவில் நிர்வாகிகளை அடையாளப்படுத்தி எம்எல்ஏ ஆக்கி மந்திரி ஆக்கி அவர்களை அழகு பார்த்த கட்சி அதிமுக. அப்படிப்பட்ட அதிமுக கட்சிக்கே ஆப்பு வைக்கறவங்க உங்களுக்கு ஆப்பு வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? உங்க கட்சிக்கு வந்த இவங்க எல்லாம் யாரு? அதிமுக கட்சியால் கட்சி உறுப்பினர்களால் கட்சி நிர்வாகிகளால் தொண்டர்களால் மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.
எம்எல்ஏ அமைச்சர்களாக பதவி கிடைக்க பாடுபட்டவர்கள் அதிமுக கட்சியினர். அந்த அடையாளம் காரணமாக தான் அவர்கள் தவெக கட்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த அடையாளம் காரணமாக தான் அவர்களை நீங்கள் தத்து எடுத்து இருக்கறீர்கள். அவங்க உழைப்பாலா தவெக கட்சியில் சேர்ந்தார்கள்? இவர்களை நம்பிதான் இன்றைய முதல் அமைச்சர் இருக்கிறார்.
நல்ல பத்திரமா கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துவாங்க. கவலைப்படாமல் இருங்க. அதிமுகவில் இருந்து அங்கு வந்த ஆட்கள் எல்லாம் எப்பேர்ப்பட்டவர்கள் என்று எங்களுக்கு தெரியும். பலமுறை அவர்களுடன் நாங்கள் பழகி இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





