- Advertisement -
Homeபொழுதுபோக்குநான்கே மாதங்களில் மக்கள் விரோத ஆட்சியாக மாறிய தவெக, இடைத்தேர்தலில் இத்தனை போராட்டம் ஏன்?...

நான்கே மாதங்களில் மக்கள் விரோத ஆட்சியாக மாறிய தவெக, இடைத்தேர்தலில் இத்தனை போராட்டம் ஏன்? – விஜய் இமேஜ் டேமேஜ் ஆக இவர்கள்தான் காரணமா?

- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணி சார்ந்த கட்சிகள் காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் ஆதரவால் விஜய் ஆட்சியமைத்து தமிழக முதல்வரானார்.

அதிமுக – திமுக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதிய மக்கள், விசில் சின்னத்துக்கு ஆதரவு தந்து ஓட்டு போட்டதால் 1.70 கோடி ஓட்டுகளை தவெக பெற்றது. எனினும் திமுக அதிமுக கட்சிகளும் கணிசமான ஓட்டுகளை பல தொகுதிகளில் வாங்கியது. திமுக – தவெக ஓட்டு வித்யாசம் 17 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனினும் திமுக தீய சக்தி அதிமுக தூர்ந்து போன கட்சி என்று வீரவசனம் பேசிய விஜய், முதல்வராக உதவியது தீயசக்தி ஆதரவில் ஜெயித்த கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் என்ற போது மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்எல்ஏக்களை தனது கட்சியில் சேர்த்துக்கொண்ட விஜய், கட்சியில் முக்கிய மாநில பொறுப்புகளை தந்திருக்கிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் பெரிய ஊழல்வாதிகளாக இருந்த இவர்களை தவெகவில் இணைத்தால் எப்படி தவெக தூய சக்தியாக நீடித்து இருக்க முடியும் என்றும் கேள்வி எழும்பியது. இதன்மூலம் தவெகவின் ஒரே நோக்கம் திமுக ஆட்சியை கலைப்பது, அதிமுக கட்சியை அழிப்பது ஒன்றுதான் என்பது மக்களுக்கு தெளிவாகி விட்டது. இந்த நோக்கத்தில் இருப்பது மத்தியில் ஆளும் பாஜக மட்டும்தான்.

- Advertisement -

அதனால் விஜயின் பின்புலத்தில் இருப்பது பாஜக தான் என்பதை புரிந்துக்கொண்ட மக்கள், பாஜக பலமுறை முயன்றும் தமிழகத்தில் வேரூன்ற முடியாத நிலையில் விஜய் என்கிற சினிமா கவர்ச்சியை காட்டி தமிழக மக்களை ஏமாற்றியது தெள்ள தெளிவாகி விட்டது. இதற்கிடையே விஜய் பேசுகிற பேச்சும் சட்டசபையில் அவரது நடிப்பும் நாடகமும் தவெக அமைச்சர்களின் செயல்பாடும் தமிழக மக்களை உஷார் அடைய செய்து விட்டது.

மேலும் தவெக அமைச்சர்கள் புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா ரமேஷ் ராஜ்மோகன் அருண்ராஜ் செங்கோட்டையன் போன்றவர்களே அதிகார மையங்களாக கட்சியை நடத்தும் நிலையில் விஜய் முதல்வராக கவர்ச்சி பொருள் போல முன்னிலைப்படுத்த படுகிறார் என்பதும் மக்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் பழைய மக்கள் கூட்டத்தை ஆராவாரத்தை காண முடியவில்லை.அங்கு வந்த கூட்டம் எல்லாமே தவெக தரப்பில் திரட்டப்பட்ட கூட்டம் என்பதும் உறுதியாகி உள்ளது. விஜயின் இமேஜ் காலியாக பாஜக பின்புலம்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்