- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நான் நடிக்கவே அந்த ஹீரோ தான் காரணம் - நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு...

தமிழ் சினிமாவில் நான் நடிக்கவே அந்த ஹீரோ தான் காரணம் – நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த நடிகை அம்பிகா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சத்யராஜ் பிரபு கார்த்திக் மோகன் கே பாக்யராஜ் விஜயகாந்த் என நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

அம்பிகா நடித்த தமிழ் படங்களில் மிஸ்டர் பாரத் படிக்காதவன் உயர்ந்த உள்ளம் காதல் பரிசு மக்கள் என் பக்கம் கண் சிமிட்டும் நேரம் அந்த 7 நாட்கள் இதயக்கோவில் விக்ரம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்ற படங்களாகும். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் அம்பிகா நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, 35 வாட்டி பார்த்திருக்கேன். 100 வாட்டி பார்த்திருக்கேன். ஒவ்வொரு சீனும் எனக்கு அந்த டயலாக் மனப்பாடம் அப்படீன்னு சொன்னால் ஒரே ஒரு தமிழ் படம் அது அந்த 7 நாட்கள் படம்தான்.

வழக்கமாக மற்ற படங்களில் ஏதோ நாலு அல்லது அஞ்சு சீன்கள் தான் நம்மை ஞாபகப்படுத்தற மாதிரி காட்சிகளாக இருக்கும். ஆனால இந்த படத்தை பொருத்த வரை படம் முழுக்க நான் வந்த காட்சிகளும் வசனங்களும் அப்படியே நிலைத்து விட்டது. அந்த 7 நாட்கள் வாழ்நாட்கள் முழுவதும் மறக்க முடியாத நாட்களாக தான் இருக்கும்.

எனக்கு வந்து காட்ஃபாதர் அப்படீன்னு யாரும் கிடையாது. ஆனால் இந்த ஃபீல்டுக்கு வர்றதுக்கு கமல் சார் ரொம்பவும் ஹெல்ப் பண்ணியிருக்கிறார். அந்த பொண்ணு நல்ல ஆர்ட்டிஸ்ட் கூப்பிடுங்கன்னு சொல்லியிருக்கார். அந்த ஒரு நன்றியை மறவாத ஒரு கேரக்டர் நான்.

நீங்க எத்தனை படம் பண்ணியிருக்கீங்க என்று என்னிடம் கேட்டால் 200 300 படம் நான் பண்ணியிருக்கேன் என்று நான் பதில் சொன்னால் அந்த பதிலில் தமிழ் சினிமாவில் அதற்கு காரணமாக இருந்தவர் கமல் சார்தான். அது எப்போதுமே என் மனசில் இருக்கும் என்று அந்த நேர்காணலில் நடிகை அம்பிகா கூறியிருக்கிறார்.

சற்று முன்