- Advertisement -
Homeபொழுதுபோக்குமாட்டு வண்டியில் பயணித்த முதல்வர் விஜய், நகர மறுத்து அடம்பிடித்த மாடுகள், அந்த மியூசிக்கை போட்டு...

மாட்டு வண்டியில் பயணித்த முதல்வர் விஜய், நகர மறுத்து அடம்பிடித்த மாடுகள், அந்த மியூசிக்கை போட்டு கலாய்ச்சுட்டாங்களே? – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு!

- Advertisement -

ஆளுங்கட்சி சந்திக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அந்த கட்சி நல்லாட்சி தருவதாகவும் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடுமையான விமர்சனங்களை சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களாக ஜெயித்த பிறகு தவெக கட்சிக்கு தாவிய தாராபுரம் தொகுதி சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் ஆகியோரால் இப்போது இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இது தானாக உருவான இடைத்தேர்தல் இல்லை. 5 மாதங்களில் மக்கள் சந்திக்கும் திணிக்கப்பட்ட தேர்தல் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் எப்படியாவது இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தவெக அரசுக்கு மவுசு இருக்கும். ஒருவேளை இந்த தொகுதிகளில் தவெக தோல்வியடைந்தால் அது பெரிய பின்னடைவாகி விடும். மேலும் திமுக – அதிமுக கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் புகார்களும் உண்மை என்றும் தெளிவாகி விடும் என்பதால் இந்த தொகுதிகளில் ஜெயிக்க தவெக கடுமையாக போராடி வருகிறது.

இதற்காக முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் ஒரு நாள் பொதுக்கூட்டத்திலும் ஒரு நாள் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ரோட்டோர கடையில் டீ குடித்தார். வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டினார். ஆனாலும் மக்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் அவருக்கு இல்லை என்பது காலியான ரோடுகளில் அவர் ரோடு ஷோ சென்ற போது தெரிய வந்தது.

- Advertisement -

அதே போல் தாராபுரம் தொகுதியில் வேட்பாளர் சத்யபாமா, மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழ விஜய் கண்ணீரை துடைத்தார். இதுவும் டிராமா நல்லா இருக்குது, விஜயை விட சத்யபாமா சூப்பரா நடிக்குது என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் இன்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோவில் ஈடுப்பட்டார்.

அப்போது 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியில் அவர் பயணித்து வாக்கு சேகரிக்க முயற்சித்தார். ஆனால் மாடுகள் சிறிதும் நகரவில்லை. மாட்டு வண்டியும் நகரவில்லை. பிறகு அங்கிருந்த தவெகவினர் காளைகளை தரதர என பிடித்து இழுத்து வண்டியை நகர செய்தனர். இதை, கரகாட்டக்காரன் படத்தில் கரகாட்ட கோஷ் கார் தள்ளும் பின்னணி இசையை கோர்த்து விட்டு, நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். மேலும் ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்