- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோ அந்த மாஸ் நடிகர்தானா? அட கேட்கவே பிரமிப்பா...

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோ அந்த மாஸ் நடிகர்தானா? அட கேட்கவே பிரமிப்பா இருக்குதே? – தரமான சம்பவம் லோடிங் ஆகப் போகுது!

- Advertisement -

ஒரு திரைப்படத்தின் முதுகெலும்பு தயாரிப்பாளர் என்றால் அந்த படத்தின் ஆணிவேராக இருப்பவர் படத்தின் இயக்குனர் தான். ஒரு இயக்குனர் அந்த படத்தின் மொத்த உருவமாக இருப்பதால் அதன் வெற்றி தோல்விக்கு அவரே முழு காரணமாகவும் இருக்கிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி என்பது இயக்குனர் மட்டுமே சார்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இது பாரதிராஜா படம் இது பாலு மகேந்திரா படம் இது மகேந்திரன் படம் இது மணிரத்னம் படம் இது கே பாக்யராஜ் படம் இது சேரன் படம் என்று அன்று முதல் இன்று வரை இயக்குனர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல விமர்சனங்களில் சிக்கிய டோரதி படத்தை கூட எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை தான் குறை கூறுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இயக்குனர் பாலா படங்கள் என்றாலே அதற்கு தனி அடையாளம் தமிழ் சினிமாவில் சேது படம் துவங்கி வணங்கான் படம் வரை இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை 25 ஆண்டுகளை கடந்துள்ள இயக்குனர் பாலா இயக்கிய படங்களின் எண்ணிக்கை 10 கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இயக்கிய முதல் படம் சேது. தொடர்ந்து நந்தா நான் கடவுள் அவன் இவன் நாச்சியார் பிதாமகன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என எல்லாமே கவனம் பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன. இதில் வணிக ரீதியான வெற்றிப் படங்கள் குறைவு என்றாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக அவை பேசப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

கடைசியாக அருண் விஜய் நடித்த வணங்கான் படத்தை பாலா டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை கவனத்தை பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த முறை அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற தகவல் கசிந்துள்ளது.

இதுவரை பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா அதர்வா ஆர்யா அருண்விஜய் சசிக்குமார் போன்ற ஹீரோக்கள் நடித்த நிலையில் முதன் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது இயக்கத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தந்துள்ளது. ஏனெனில் நடிப்பில் அதகளம் செய்யும் ஹீரோ விஜய் சேதுபதி. அவர் பாலா இயக்கும் படத்தில் நடித்தால் அது வேற லெவல் சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறத் துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்