தமிழ் சினிமா ரசிகர்களில் ஒரு தரப்பினர், தங்கள் அபிமான ஹீரோவை ஒரு ஆதர்ஷ புருஷனாக எல்லாம் வல்ல சக்தி படைத்த ஒரு பெரிய கொம்பனாக பார்க்கின்றனர். உண்மையில் திரையில் தெரிவது அவரது பிம்பமே தவிர நிஜம் அல்ல என்பதை உணர தவறி விடுகின்றனர். மந்திரித்த கோழி போல அந்த நடிகரை மட்டுமே பெரிய அளவில் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் பெரும்பாலான நடிகர்கள், தங்களது ரசிகர்களை ஒரு கொத்தடிமை போல் தான் பாவிக்கின்றனர். மேடையில் ரசிகன்தான் என்னுடைய உயிர். என் நெஞ்சில் குடியிருக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்கள், உறவே உயிரே தமிழே என்று மாஸ் ஆக டயலாக் பேசினாலும் உண்மையில் தன் ரசிகனுக்காக எந்தவித உதவியும் செய்ய முன்வராத அட்டைக்கத்தி ஹீரோக்கள் இவர்கள் என்பதை அந்த சிந்திக்கும் திறன் அற்ற ரசிகர்கள் உணர்வதே இல்லை.
எந்த நடிகரும் தன் வீட்டுக்கு வரும் ரசிகர்களை வீட்டுக்குள் அழைத்து காஃபி டீ தந்து உணவு பரிமாறி உபசரிக்க மாட்டார்கள். தன்னை தேடி வரும் ரசிகர்களை கேட்டுக்குள் கூட நுழைய விடாமல் வீட்டு வாசலிலேயே செக்யூரிட்டிகள் மூலம் துரத்தியடித்து விடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் ரசிகர்கள் எல்லாம் இந்த நிழல் ஹீரோக்களை நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உருப்பட வேண்டிய இளைஞர்களை நற்பணி மன்றம் என்னும் போர்வையில் விசில் அடிச்சான் குஞ்சுகளாக வைப்பதில் தற்போது கங்குவா சுள்ளான் மற்றும் இந்த திடீர் தளபதி உள்ளிட்டோர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மீண்டும் ஒரு தலைமுறை இந்த சினிமாக்காரன்கள் பின்னால் அலைந்து வாழ்க்கையை தொலைக்கக் கூடாது. உஷாராக இருங்கள். திருந்தாத சில ஜென்மங்கள் வேண்டுமானால் இவர்கள் பின்னால் ஓடி விசில் அடித்து நாசமாய் போகட்டும். தன்மானம் உள்ள இளைஞர்கள் இந்த அற்ப செயல்களை தவிருங்கள்.
மேலும் சுள்ளான் கங்குவா திடீர் தளபதிகளின் ரசிகர் மன்ற சூட்டிங் எல்லாம் சிரிஞ்ச் கம் காமெடி எண்டர்டெயினராக இருக்கு. ஆனா இவங்க படங்கள் தான் சூர மொக்கைகளா இருக்கு. நல்ல படத்தை மட்டும் பார்த்துட்டு வேலையை பாருங்க. இவனுங்களுக்கு விசில் அடித்து நாசமா போகாதீங்க என்று அந்த பதிவில் ரசிகர்களை ப்ளு சட்டை மாறன் எச்சரித்து இருக்கிறார்.





