- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர்டெவில் படம் ஷூட்டிங் துவங்குவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் - கதிகலங்கிப் போன தயாரிப்பாளர் அஜீத்குமார்,...

டேர்டெவில் படம் ஷூட்டிங் துவங்குவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் – கதிகலங்கிப் போன தயாரிப்பாளர் அஜீத்குமார், இப்படி ஒரு விஷயமே அவருக்கு தெரியாதாம்!

- Advertisement -

குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் அஜீத்குமார் சொந்தமாக தயாரிக்கிறார். அவரது மனைவி ஷாலினி இந்த படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இன்னும் கதாநாயகி முடிவாகவில்லை. ஸ்ரீலீலா முதலில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை என்கின்றனர்.

- Advertisement -

வரும் நவம்பர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு நடக்க வாய்ப்பில்லை என்ற புதிய தகவல் வெளியாகி அஜீத் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. ஏனெனில் இந்த படத்துக்கு பிரபல தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின், ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோர் 100 கோடி ரூபாய் வரை பைனான்ஸ் செய்ய சம்மதம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இப்போது அந்த தொகையை 5 மாதங்களுக்கான வட்டி 3 சதவீதம் பிடித்துக்கொண்டு தான் கொடுப்போம் என்று கூறியிருக்கின்றனர். இது தமிழ் சினிமாவில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். சாதாரணமாக ஒரு மாதம் வட்டி பைனான்ஸில் பிடித்தம் செய்யப்படும். ஆனால் சினிமா துறையில் அதுவே 5 மாதங்களாக உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 100 கோடி ரூபாய்க்கு 5 மாதங்கள் வரை 3 சதவீதம் வரை வட்டியை பிடித்தால் 15 கோடி ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்துக்கொண்டு மீதி 85 கோடி ரூபாய் மட்டுமே அஜீத்குமார் தரப்புக்கு கிடைக்கும். ஆனால் அந்த பிடித்தம் செய்யப்பட்ட வட்டி 15 கோடி ரூபாய்க்கும் சேர்த்துதான் 100 கோடி ரூபாயில் அவர்கள் வட்டியை செலுத்த வேண்டும்.

இப்படி ஒரு நடைமுறை இருப்பதே தெரியாது என்று அஜீத்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் டேர் டெவில் படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேறு யாராவது பைனான்சியர் மூலம் ரூ. 100 கோடி கடன் பெற முயற்சித்தால் அவர்களும் அஜீத்குமாருக்கு தர மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த படம் ஷூட்டிங் திட்டமிட்டபடி நவம்பரில் துவங்குமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்