- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஐஆர் மூலம் 74 லட்சம் தமிழக வாக்காளர்கள் பெயர் நீக்கம், இதுதான் கடந்த தேர்தலில் நடிகர்...

எஸ்ஐஆர் மூலம் 74 லட்சம் தமிழக வாக்காளர்கள் பெயர் நீக்கம், இதுதான் கடந்த தேர்தலில் நடிகர் விஜயின் வெற்றிக்கு காரணமாக இருந்ததா? வெடித்த புதிய சர்ச்சை!

- Advertisement -

எஸ்ஐஆர் எனப்படும் ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் என்பது என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகும். 2026ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் இந்த தீவிர சரிபார்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

எஸ்ஐஆர் என்பது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சுருக்கமான வாக்காளர் திருத்தப் பணிகளில் இருந்து மாறுபட்டது. இதில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், நேரடியாக ஒவ்வொரு வாக்காளரின் வீடுகளுக்கும் சென்று விபரங்களைச் சரிபார்ப்பார்கள். அதில் போலி வாக்காளர்கள் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை பெற்றுள்ள இரட்டை பதிவுகளை நீக்குவார்கள்.

- Advertisement -

இறந்து போனவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவார்கள். தகுதியுள்ள புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பார்கள். முந்தைய பட்டியல் , அக்டோபர் 2025ன் படி தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி ( 6,41,14,587) வாக்காளர்கள் இருந்தனர். இதில் எஸ்ஐஆர் ஆய்வின்படி 97.28 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்த வரைவுப் பட்டியல் வெளியான பிறகு, விடுபட்ட தகுதியான 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

மேலும் 4.23 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 2026 பிப்ரவரி இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி ( 5,67,07,380) ஆகும்.அக்டோபர் 2025ல் இருந்த 6.41 கோடி வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது, எஸ்ஐஆர் இறுதிப் பணிகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்தத் திருத்தப் பணியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையின் காரணமாக, திமுக அதிமுக வெற்றி பெற வேண்டிய தொகுதிகளில் தவெக அதிக தொகுதிகளில் வென்றதாக இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவும் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகமாக தவெக வெற்றி பெற்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 இடங்களில் 24 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட 66 இடங்களில் 32 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது என்று பிஸினஸ் லைன் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் தான் தேர்தல் முடிவுகள் மாறியதாகவும் அது தவெக கட்சிக்கு சாதகமாக மாறியதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்