- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரட்டை ஹீரோக்களாக லோகேஷ் கனகராஜ் அனிருத் நடிக்கும் புதிய படம் - தயாரிக்க போவது நடிகர்...

இரட்டை ஹீரோக்களாக லோகேஷ் கனகராஜ் அனிருத் நடிக்கும் புதிய படம் – தயாரிக்க போவது நடிகர் கமல்ஹாசன் தான், டைரக்டர் யார் தெரியுமா? தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்க உள்ளனர். அந்த படம் குறித்த ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட் லொக்கேஷன் பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படம் உருவாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத் இருவரும் இரட்டை நாயகர்களாக நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகவே அனிருத் படத்தில் நடிப்பதற்காக பலவிதமான முயற்சிகள் நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

டிசி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே உள்ளது. ஆனால் அது டிசி படத்தின் 2ம் பாகமா, அல்லது வேறு படமா என்பது சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணியில் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கும் இந்த புதிய படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசனே தயாரிக்க உள்ளதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்கமல் நிறுவனத்துக்கு அன்பறிவ் மாஸ்டர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருமே மிகவும் வேண்டியவர்கள் என்பதால் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க மறுத்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த புதிய படத்தில் நடிக்க இருப்பதும் ரசிகர்களின் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்