- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹீரோ 2 படம்தானே நடிச்சிருக்கார்? அடுத்து அவரும் அரசியல் களத்துல குதிக்க போகிறாரா? தனுஷ்...

அந்த ஹீரோ 2 படம்தானே நடிச்சிருக்கார்? அடுத்து அவரும் அரசியல் களத்துல குதிக்க போகிறாரா? தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு போட்டி பலமா உருவாகுதே?

- Advertisement -

நடிகர் விஜய் தவெக கட்சியை துவங்கி 2 ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவிக்கு வந்த நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கு நான்தான் அடுத்த முதல்வர் என்ற அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏதோ வார்டு கவுன்சிலர் பதவியை போல ஆளாளுக்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது கேலிக்கூத்தாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து பல ஜாம்பவான் ஹீரோக்கள் அரசியலுக்கு வந்தனர். அதில் மக்களிடம் உண்மையான வரவேற்பை பெற்ற நிஜ ஹீரோக்கள் என்றால் அது புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் கேப்டன் விஜயகாந்தும் மட்டும்தான். மற்றபடி எந்த ஹீரோவுக்கும் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு செல்வாக்கு அரசியலில் கிடைக்கவில்லை.

- Advertisement -

குறிப்பாக சிவாஜி கணேசன் கமல்ஹாசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் நவரச நாயகன் கார்த்திக் சரத்குமார் கருணாஸ் மன்சூர் அலிகான் என பலரும் அரசியல் களத்தில் குதித்து பலத்த ஏமாற்றத்தை சந்தித்தவர்கள் தான். இதில் நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கு. இவர் மக்களின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி ரீல்ஸ்களை வௌியிட்டு அந்த விளம்பர யுக்தியால் ஜெயித்தவர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் கடந்த தேர்தலின் போது நீக்கப்பட்டுள்ளனர். அதில் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தான் தவெக அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது. குளத்தில் தண்ணீரை வற்றச் செய்வது போல திமுக அதிமுக ஆதரவை குறைத்து தவெக அதிக தொகுதிகளை கைப்பற்றியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். தமிழக எழுச்சிக்கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ள நடிகர் தனுஷ் விரைவில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வருகிற 2027 பொங்கல் பண்டிகைக்கு பிறகு அவரது அரசியல் அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் லெஜண்ட் அருள் சரவணன் என்கிற லெஜண்ட் அண்ணாச்சியும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டதாக கோலிவுட்டில் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கசிந்துள்ளது. தொழிலதிபர் சரவணன் அண்ணாச்சி, மிக விரைவில் அரசியல் களத்தில் குதிக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் லெஜண்ட் மற்றும் லீடர் என 2 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்