இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். அவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் படைப்பாளியாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தமிழ் சினிமா கலைஞர்களின் பெரிய கனவாக உள்ளது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பிறமொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் கூட நேர்காணலில் பேசும் போது, தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். அவரது படத்தில் நடிக்க சம்பளம் கூட வேண்டாம். அவர் படத்தில் நடிப்பதே பெருமை என்று கூறியிருக்கின்றனர்.
அந்தளவுக்கு இயக்குனர் மணிரத்னம் ஒரு பெருமைக்குரிய இயக்குனராக இருந்து வருகிறார். அவர் இயக்குனர் மட்டுமல்ல, சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு சொந்தமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்தான் மணிரத்னம் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. அதனால் மணிரத்னம்தான் அந்த படங்களின் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள இஞ்சி வெல்லம் காதல் திரைப்படத்திற்காக தனது வழக்கமான 15 கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்துக் கொண்டு 6 கோடி ரூபாய் மட்டுமே பெற ஒப்புக்கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த படம் வருகிற 2027 பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்ற லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.
ஆனால் உண்மையில் இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகி உள்ளிட்ட எந்த கலைஞராக இருந்தாலும் அவர்கள் அப்போது வாங்குகிற சம்பளத்தில் 25 சதவீதம் மட்டுமே தருவார் என்பதுதான் உண்மை. தக்லைஃப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க கமிட் ஆகி பிறகு வெளியேற சம்பளம்தான் காரணம் என்று அப்போதே தகவல் வெளியானது.
அதனால் இஞ்சி வெல்லம் படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதியின் ரூ. 15 கோடி சம்பளத்தை படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் மணிரத்னம் 6 கோடி ரூபாயாக குறைத்திருப்பார். விஜய் சேதுபதியும் வேறு வழியின்றி கமிட் ஆகி விட்டதால் இனி விலகினால் நன்றாக இருக்காது என்பதால் அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருப்பார் என்று ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





