- Advertisement -
Homeபொழுதுபோக்குலைகா புரடக்சன்ஸ் ஷங்கர் கமல் - இடையே நீடித்த எல்லா பஞ்சாயத்தும் ஓவர் ஓவர், ...

லைகா புரடக்சன்ஸ் ஷங்கர் கமல் – இடையே நீடித்த எல்லா பஞ்சாயத்தும் ஓவர் ஓவர், விரைவில் திரைக்கு வரும் இந்தியன் 3, படப்பிடிப்புக்கு தயாரான நாயகன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல் அப்பா – மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தாத்தா கேரக்டரில் சேனாபதியாக கமலும் மகன் கேரக்டரில் ஆர்டிஓ அதிகாரியாக கமலும் நடித்திருந்தார். மனிஷா கொய்ராலா ஊர்மிளா சுகன்யா கஸ்தூரி கவுண்டமணி செந்தில் நெடுமுடி வேணு நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டது.

- Advertisement -

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போதே இந்தியன் 3 படத்துக்கான பெரும்பாலான காட்சியை இயக்குனர் ஷங்கர் எடுத்து விட்டார். அப்படி 2ம் பாகம் 3ம் பாகம் இரண்டையும் மாற்றி மாற்றி எடுத்த நிலையில் 2ம் பாகத்தின் கதையம்சம் சொதப்பி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஒரு புகார் எழுந்தது. மேலும் படத்தின் பட்ஜெட்டும் இதனால் தாறுமாறாக எகிறி விட்டது.

அத்துடன் இந்தியன் 2 இந்தியன் 3 படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் என்ற படத்தின் ஷூட்டிங்கிலும் ஈடுபட்டார். இதுவும் இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் லைகா நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

- Advertisement -

மேலும் இந்தியன் 3 படத்தில் விடுபட்ட காட்சிகளில் நடிக்க கமல் அதிக சம்பளம் கேட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்த நிலையில் லைகா புரடக்சன்ஸ் ஷங்கர் கமல் 3 தரப்பில் இருந்தும் இந்தியன் 3 படம் குறித்து மெத்தனம் காட்டியதால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த படம் திரைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் இன்னும் ஒரு மாதம் ஷூட்டிங் பாக்கி இருப்பதால் அதை எடுத்து முடித்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

இந்த நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்படி லைகா ஷங்கர் கமல் மூன்று தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு சங்கடங்கள் விரோதப்போக்கு எல்லாம் பஞ்சாயத்து பேசி சரி செய்யப்பட்டுள்ளது. அதனால் மிக விரைவில் இந்தியன் 3 படப்பிடிப்பு துவங்கி நடத்தப்பட இருக்கிறது. கமலும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். இந்தியன் படத்தை போல இந்தியன் 3 படமும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்