- Advertisement -
Homeபொழுதுபோக்குஇடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு - மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் வெல்லப் போவது யார்? ஸ்டாலின்...

இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு – மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் வெல்லப் போவது யார்? ஸ்டாலின் விஜய் இருவரில் மகுடம் யாருக்கு?

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்று வரும் 10ம் தேதியுடன் 5 மாதங்கள் ஆகப் போகிறது. மே மாதம் 10ம் தேதி விஜய் முதல்வரான நிலையில் முதல் முறையாக தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தலை அந்த கட்சி சந்தித்துள்ளது.

இதில் தவெக எதிர்நோக்கும் முக்கிய பிரச்னையே அவர்கள் இருவருமே கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயித்து எம்எல்ஏ ஆன பிறகு அந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் தாவியவர்கள். ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றியவர்கள். அதிமுக கட்சிக்கும் துரோகம் இழைத்தவர்கள் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

இந்த சூழலில் ஆளுங்கட்சியான தவெக எதிர்கட்சியான திமுக எம்எல்ஏக்களை தவெக கட்சிக்கு பறிகொடுத்த அதிமுக மேலும் இடது சாரி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி இந்த இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது. எனினும் கடுமையான நேரடியான போட்டி என்பது ஆளுங்கட்சி தவெக எதிர்கட்சி திமுக இரண்டும் இடையில் மட்டும்தான்.

ஆனால் அதே சமயத்தில் இந்த 2 தொகுதிகளிலும் கடந்த முறை பொதுத்தேர்தலில் ஜெயித்த அதிமுக வேட்பாளர்கள்தான். அதனால் தவெக கட்சி வேண்டாம் விஜய் வேண்டாம் என்று அன்றே முடிவெடுத்த மதுராந்தகம் தாராபுரம் மக்கள், இப்போது அதிமுகவில் இருந்து ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றிவிட்டு போன அதே நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர மாட்டார்கள் என்றே உறுதியாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா சென்ற பக்கம் எல்லாம் எதிர்ப்பு கிளம்பி மக்கள் விரட்டியடித்தனர். அவர் மேடையில் விஜய் இருந்த போது, ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கேவலமாக பேசுகிறார் என்று அழுததை கூட நாடகம் என்றுதான் மக்கள் விமர்சித்தார்கள். அதே நிலை தான் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்க்கும் ஏற்பட்டது.

அதே போல் விஜய் இந்த இடைத்தேர்தலில் வந்த பிரசாரத்தின் போது மக்கள் கூட்டமும் திரளவில்லை. வழக்கமான அந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் இல்லை. அதனால் நாளை வெளியாக உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சி தவெகவுக்கு மகுடம் சூட்டுமா, அல்லது திமுக அல்லது அதிமுக கட்சிக்கு மகுடம் சூட்டுமா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே வேளையில் ஒரு ஓட்டுக்கு டிபன்பாக்ஸில் ரூ. 10 ஆயிரம் சேலை காமாட்சி விளக்கு என 2 தொகுதிகளிலும் தவெக பணத்தை அள்ளி இறைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதனால் ஜெயிக்க போவது ஜனநாயகமா, பண நாயகமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்