விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 8ல் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். இவர் ஆரம்பத்தில் பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் என்ற பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறிவிட்டு தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் தாமரை, பிக்பாஸ் முத்துக்குமார் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது, பேசியே பெண்களை மயக்கும் வித்தகன் முத்துக்குமரா. இந்த பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டாய் அல்லவா?
இதோ வெளிவந்துவிட்டது உன் குட்டு. இது இந்த பயல் முத்துக்குமரனை பற்றியது மட்டுமல்ல. பேசி மயக்கும் மயக்கும் அனைத்து கில்லாடி அயோக்கியர்களுக்குமானதுதான். ஆண் பெண் இரண்டு பாலருமே இந்த கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். நன்றாக பேசி ஊடகங்களில் கொஞ்சம் பெருவலம் அடைந்ததுமே ஆரம்பித்து விடுகிறார்கள்.
சொல்லப்போனால் பார்வை எல்லாம் யாரை வலையில் சிக்க வைப்பது என்பதுதான். அதற்கு இந்த மயக்கும் பேச்சுக்களை போல் வேறு எதுவும் உண்டோ? பேசுவது எல்லாம் உலக வீச்சில் இருக்கும். பூமியை புரட்டிப்போடும் பேச்சு. அது போன்ற நேர்மையாளன் செயல்வீரன் தியாகி பசிநோக்கான் கண் துஞ்சான் லட்சியவாதி எவருமே இல்லை என்று இரையை நம்ப வைக்கும் அந்த பேச்சும் உடல் மொழியும் இருக்கும்.
எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் சில பேர் அதை தாண்டிய விற்பன்னர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் அடிப்படையில் ஒரு தூண்டில் இருக்கிறது. ஏதாவது சித்தாந்தம் கருத்தாக்கத்தில் ஊறி திளைத்தவர்களாக அல்லது அப்படி காட்டிக் கொள்பவர்களாக இருப்பார்கள். முத்துக்குமரனை பற்றி இந்த பெண் துணிச்சலாக சொல்லி இருப்பது வியப்பு.
ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம். இனி சமூகத்தை எப்படி எதிர்கொள்ள போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பாய் அல்லவா? அப்போது அந்த தமிழ்நாக்கு எப்படி சுழல்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கவிஞர் தாமரை அந்த பதிவில் கூறியிருக்கிறார் முத்து குமரனை பற்றி விமர்சித்து இருக்கிறார்.





