- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதத்தில்தான் வெளிவருகிறது? சூப்பர் அப்டேட்

அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதத்தில்தான் வெளிவருகிறது? சூப்பர் அப்டேட்

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் வெளிவந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருந்தார்கள்.

அஜித்தின் போட்டி நடிகரான விஜய், “லியோ” திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 68 ஆவது திரைப்படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பே தொடங்கப்படாமல் இருப்பது ரசிகர்களின் வேதனையை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு நற்செய்தி வெளிவந்துள்ளது. அதாவது அஜித்குமார் துபாயில் ஒரு வீடு வாங்கியுள்ளாராம். அந்த வீட்டில்தான் அவர் மூன்று மாதங்கள் தங்கவுள்ளாராம்.

எந்த மூன்று மாதங்கள் என்றால், “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக அஜித் அக்டோபரில் இருந்து அடுத்த வருட ஜனவரி வரை கால்ஷீட் தந்துள்ளாராம். இதில் மூன்று மாதங்கள் துபாய் பகுதியில்தான் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.

மேலும் “விடாமுயற்சி” திரைப்படத்தை வருகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இத்திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் அஜித், தனது பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்க உள்ளாராம். கிட்டத்தட்ட 11 மாதங்கள் தனது பைக்கில் உலகை சுற்றி வர உள்ளாராம். இவ்வாறு ஒரு அசத்தலான தகவல் வெளிவருகிறது.

அஜித் நடிக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனராம்.

சற்று முன்