நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்துக்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை அஜீத்குமாரின் மனைவி ஷாலினி சொந்தமாக தயாரிக்கிறார். முதன் முறையாக இந்த படத்தில் ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, அஜீத் நடிச்ச கிளாடியேட்டர் படத்தை எல்லாம் விட்டுடுங்க. கார் ரேஸ் பத்தின படம் அது. அந்த படம் எல்லாம் ஓடாது. அதை எல்லாம் யாருமே அவ்வளவு ஆர்வமா தியேட்டருக்கு வந்து பார்க்க மாட்டாங்க.
அந்த படம் பெருசா ஓடப்போறது இல்லே. அது எனக்கு நல்லாவே தெரியும். கார் ரேஸை எல்லாம் பெருசா விரும்பற ஆட்கள் கிடையாது. அந்த படம் பாட்டுக்கு வருது. வந்துட்டு போகப் போகுது. ஆனா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஷாலினி தயாரிக்கிற டேர் டெவில் படம் மேல ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குது. இதுவே டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலா மகிழ்திருமேனி மாதிரி இருந்தால் அந்த எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இல்லாம போயிருக்கும்.
ஆதிக் ரவிச்சந்திரன் ஓரளவுக்கு கமர்ஷியலாக படம் பண்ணக்கூடியவர். கண்டிப்பாக அஜீத் ரசிகர்களை அவர் கொண்டாட வைப்பார். அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை. அப்புறம் ஏன் இந்த படத்தை ஷாலினி தயாரிக்கிறாங்க. இந்த அறிவிப்பு ஏன் என்று கேட்டால் அஜீத்குமார் கேட்கிற அதிகமான சம்பளம்தான் காரணம்.
அதனால்தான் அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. இதுதான் நீண்ட காலமாக உள்ள பிரச்னை. அஜீத்குமார் தனது சம்பளத்தை குறைப்பது தனக்கு கெளரவக் குறைச்சலாக கருதுகிறார். தனது மரியாதையை குறைப்பதாக நினைக்கிறார்.
ரஜினியாகவே இருந்தாலும் மற்ற ஹீரோக்களாக இருந்தாலும் நீர் உயர நெல் உயரும் என்கிற மாதிரி மார்க்கெட் இருந்தால் தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் அதை அஜீத்குமார் மட்டும் புரிந்துக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறார் என்று அந்த நேர்காணலில் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





