- Advertisement -
சென்னையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணியை வழங்கினார். அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியதாவது, இன்றைய சூழலில் நம்மில் பலருக்கு பிரியாணி என்பது சுவையான உணவு மட்டுமின்றி விடுமுறை நாட்களில் அது ஒரு ஆப்ஷனாக மாறிவிட்டது. நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் பிரியாணியை தவிர்த்து விட்டு விலை குறைவு என்பதற்காக குஸ்காவை மட்டும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் ஒருவேளை உணவு கிடைக்காதவர்களுக்கு பிரியாணி என்பதும் அதை சாப்பிடுவது என்பதும் எளிதில் நடக்காத ஒன்றாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





