- Advertisement -
Homeபொழுதுபோக்குரெண்டு விஷயம் மட்டும்தான் உண்மை, மத்ததை எல்லாம் நம்பாதீங்க… சிம்பு 49 படத்தின் டைரக்டர் அஸ்வத்...

ரெண்டு விஷயம் மட்டும்தான் உண்மை, மத்ததை எல்லாம் நம்பாதீங்க… சிம்பு 49 படத்தின் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து – என்ன ப்ரோ இப்படிச் சொல்றீங்க?

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, செக்கச் சிவந்த வானம், மாநாடு, பத்துதல உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றது. இதில் அதிக வரவேற்பை பெற்ற வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் டைரக்ட் செய்து இருந்தார். அதேபோல் வெங்கட் பிரபு இயக்கியிருந்த மாநாடு படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிலம்பரசன், மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். முதன்முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அடுத்த ஆண்டில் ஸம்மருக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. கடந்த 2020ம் ஆண்டில் அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். ஓ மை கடவுளே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

இப்போது அஸ்வத் மாரிமுத்து, லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற 2025ம் ஆண்டில் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது சிலம்பரசன் நடிக்கும் 49 வது படம்.

- Advertisement -

இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க போகிறார். படத்தில் மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடிக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. வழக்கமாக சிலம்பரசன் நடிக்கும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். இந்த முறை யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க போகிறார் என்று கூறப்பட்டது. மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மீனாட்சி சௌத்ரி. அவர்தான் சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார் என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில் சிம்பு 49 படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய வணக்கம். சிம்புவின் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தையும், என்னையும் தவிர வேறு எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அப்படி நாங்கள் வேறு எதையும் முடிவு செய்தால் அந்த தகவலை உங்களுடன் தான் முதலில் பகிர்வோம். எனவே நீங்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது என்று அதில் கூறியிருக்கிறார். இதன் மூலம் சிம்பு 49 படத்தின் இசையமைப்பாளர் அனிருத், படத்தின் கதாநாயகி மீனாட்சி சவுத்ரி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை அதனால் இன்று போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்