தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். சமீபத்தில்தான் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். ஜெயம் என்ற படமே அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தோல்வி படங்களை தருவதால் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டிருக்கிறார்.
கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ரவி மோகன், சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த திருமண விழாவில் மற்றவர்களை காட்டிலும் அதிகளவில் டிரண்டிங்கில் இருந்தது நடிகர் ரவி மோகனும் அவரது கரம்பிடித்து ஜோடியாக வந்த பாடகி கெனிஷாவும்தான்.
இந்த திருமண விழாவுக்கு பட்டு வேட்டி சட்டையில் நடிகர் ரவி மோகனும் அதே போல் பட்டு புடவையில் பாடகி கெனிஷாவும் புதுமணத் தம்பதி போல வந்திருந்தனர். கெனிஷாவின் கைபிடித்து அழைத்து வந்தார் ரவிமோகன். இருவரும் அங்கிருந்த ஷோபாவில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். புகைப்படங்களுக்கு ஒன்றாக நின்று போஸ் தந்தனர். இந்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதனால் ஆவேசமடைந்த ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, தனது கணவரை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு நடிகைகள் குஷ்பு ராதிகா சரத்குமார் திரிஷா உள்ளிட்டோர் தங்களது பலத்த ஆதரவை தெரிவித்திருந்தனர். அதே போல் பாடகி கெனிஷாவும், ஆர்த்திக்கு பதிலடி தரும் விதமாக அமைதி தரும் பெண்ணிடமே ஆணின் இதயம் செல்லும் என்றும் கூறியிருந்தார்.
இப்போது வந்த புதிய தகவலின்படி, தனது காதலியான பாடகி கெனிஷாவுக்கு மும்பையில் ரூ. 10 கோடி மதிப்பில் பங்களா வீட்டை ஒன்றை வாங்கி தந்திருக்கிறார் நடிகர் ரவிமோகன். மேலும் கெனிஷா நடத்தி வரும் ஹீலர் தெரபி கிளினிக்கை ரூ. 5 கோடி செலவில் புதுப்பித்தும் ரவி மோகன் தந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





