- Advertisement -
சமீபத்தில் நடிகர் ஷ்யாம் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் நடித்த ஒரு படத்தில் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. என் வீட்டுக்கு 10 ரவுடிங்க வந்து என்னை மிரட்டுனாங்க. நான் உடனே விஜயகாந்த் சாருக்கு ஒரே ஒரு போன் பண்ணி, சார் வீட்டுக்கு வந்து மிரட்டுறாங்கன்னு சொன்னேன். போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு நீ தூங்கு என்று சொல்லிட்டு, என்கிட்ட பிரச்சினை பண்றதுக்கு ஆட்களை அனுப்புனவருக்கு போன் பண்ணி பேசியிருக்கார். இனிமே இது ஷாம் பிரச்சினை இல்லை. என்னோட பிரச்சனை என்று சொல்லி கொஞ்ச நேரத்துல அந்த பிரச்சனையை முடித்து வைத்தார் என்று நடிகர் ஷ்யாம் கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார்.





