- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரமேஷ் திலக் கூறியதாவது, நான் காளி வெங்கட் மணிகண்டன் ஹரி விவேக் பிரசன்னா கலையரசன் என்று நாங்கள் காலேஜ் கேங் மாதிரி ஒரு செட் இருக்கிறோம். எங்களுக்குள் எனக்கு இந்த டேட்ஸ் சரியாக வரவில்லை. நீ போய் கேள் என்று பரஸ்பரம் உதவிக்கொள்கிறோம். தயவுசெய்து ஒரு வேலையை துணையாக பார்த்துக் கொண்டு சினிமாவுக்குள் வரவேண்டும். ஏதாவது சேமிப்பு கையில் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் நீங்கள் வாய்ப்பு கேட்க மாட்டீர்கள். ஏக்கமாக பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை வராது என்று நடிகர் ரமேஷ் திலக் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





