- Advertisement -
டோரதி பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பதிவில் திரௌபதி பட இயக்குனர் மோகன்ஜியை கண்டித்து கூறியிருப்பதாவது, உங்களால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்று நேகா என்ற திருநங்கையிடம் மோகன்ஜி கேட்கிறார். ஆனால் பொதுதளத்தில் இவ்வாறு கேள்வி எழுப்புவது அந்த திருநங்கை மீது செலுத்தப்படும் மனரீதியான வன்முறை. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோளா? ஏன் நாய் பன்றி போன்ற விலங்குகளும்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறது என்று கார்த்திக் சுப்பராஜ் அதில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.





